இனி 'வயது மூப்பு' எனப் போட முடியாது! வீடுகளில் நிகழும் மரணங்களுக்குப் புதிய ரூல்ஸ் - தமிழக அரசு அதிரடி!

வீடு​களில் முதியோர்கள் இறந்தால், இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து பதிவு செய்வது அவசியம் என்றும் தமிழக பொது சுகா​தா​ரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
certification mandatory for home deaths
certification mandatory for home deathsAI generated
Published on

வீடு​களில் முதியோர்கள் இறந்தால், அதற்கு காரணமாக வயது மூப்பு என பதிவிடக்கூடாது என்றும், இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து பதிவு செய்வது அவசியம் என்றும் தமிழக பொது சுகா​தா​ரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

பொதுவாக மருத்துவமனைகளில் நிகழும் இறப்புகளுக்குக் காரணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், வீடுகளில் நடக்கும் இறப்புகளுக்குப் போதிய மருத்துவக் காரணங்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்ற குறையைப் போக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது.

தமிழகத்​தில் ஆண்​டு​தோறும் சுமார் 6.96 லட்​சம் உயி​ரிழப்​பு​கள் நிகழ்​கின்​றன. அதில், 23% மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சை​யில் இருக்​கும் போதும், 73% வீடு​களிலும் 4% எதிர்​பா​ராத விபத்​துகள் காரண​மாக நடக்​கிறது. அந்த வகையில் மருத்துவமனைகளில் ஏற்படும் மரணங்களை விட வீடுகளில் நிகழும் மரணங்கள் அதிகமாக உள்ளது.

இந்​நிலை​யில், வீடுகளில் நிகழும் அதிகளவிலான இறப்புகளுக்குப் பின்னால் உள்ள நோய்கள் மற்றும் காரணங்களைக் கண்டறிந்து, அதன் மூலம் அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை தடுப்புப் பணி​கள் செய்​யும் ஆய்வை தமிழக பொது சுகா​தா​ரத்​துறை மேற்​கொண்டு வரு​கிறது.

இதையும் படியுங்கள்:
தமிழக சுகாதாரத் துறை சார்பில் குரங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்!
certification mandatory for home deaths

முதல்​கட்​ட​மாக, உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவற்றுடன் இணைந்து கரூர், கிருஷ்ணகிரி மாவட்​டங்​களில் 2023-ம் ஆண்​டு​களில் இறந்​தவர்​களின் விபரங்​கள் சேகரிக்​கப்​பட்​டன. அதில், எவ்​வித காரண​மும் இன்​றி, வயது மூப்பு காரண​மாக இறந்​தனர் என குறிப்​பிடப்​பட்​டுள்ள தகவல்​களின்​படி, இறந்​தவர்​களின் வீடு​களுக்கு சென்​று, இறப்​புக்​கான நோய் உள்​ளிட்ட காரணங்​கள் பதிவு செய்​யப்​படு​கிறது. அதில், 98% இறப்​புக்​கான காரணம் கண்​டறிந்​த​தில், 20% வரை இதய நோ​யாலும், 7% நீரிழிவு நோய் போன்​றவற்​றாலும் இறப்​பு​கள் நிகழ்ந்​திருப்​பது தெரியவந்​துள்​ளது.

கரூர், கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து தற்போது பெரம்பலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இந்த ஆய்வு விரிவுபடுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் விரிவுப்​படுத்​தப்​பட​வுள்​ளது.

வரும் காலங்​களில் வீடு​களில் இறந்​தா​லும், இறப்​புக்​கான காரணத்தை மருத்துவர் மூல​மாக உறுதி செய்து சான்​றிதழ் வழங்​கு​வது கட்​டாய​மாக்​கப்​படும் என்றும் இறந்​தவர்​களின் இறப்​பு​களை முறை​யாக பதிவு செய்​யு​மாறு அனைத்து சுகா​தார அதி​காரி​களுக்​கும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த புள்ளி விபரங்​கள் மூலம் ஒரு பகு​தி​யில் அதி​கப்​படி​யாக இறப்​புக்​கான காரணத்தை கண்​டறிந்​து, அதன் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள், விழிப்​புணர்​வு தடுப்​பு நடவடிக்​கைகளைச் சுகாதாரத்துறை தீவிரப்படுத்துவதன் மூலம் வரும் காலங்களில் தவிர்க்கக்கூடிய மரணங்களைக் குறைக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தின்படி, வீடுகளில் இறந்தவர்களின் காரணத்தைக் கண்டறிய சுகாதாரத் துறை வெர்பல் ஆட்டோப்சி எனும் முறையைப் பயன்படுத்துகிறது. இதில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் இறந்தவரின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தாரிடம் இறப்பதற்கு முன் அவருக்கு இருந்த அறிகுறிகள், குறித்துக் கேட்டுப் பதிவு செய்து இந்தத் தகவல்கள் ஒரு மென்பொருள் அல்லது மருத்துவர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, இறுதியில் மரணத்திற்கான காரணம் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பொதுமக்களுக்கு உதவும் ஏஐ டாக்டர்.! மாநில அரசின் மாஸ்டர் பிளான்.!
certification mandatory for home deaths

சென்னை போன்ற நகர பகுதிகளில் வீடுகளில் இயற்கை மரணத்தால் இறக்கும் முதியோர்களின் உடல்களை, மயான பூமியில் தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கு, டாக்டர் உறுதி சான்றிதழ் கட்டாயம் என்பதால், வீடுகளில் யாராவது இறக்கும் பட்சத்திர் டாக்டர் உறுதி சான்றிதழ் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த சூழ்நிலையில் மாநிலம் முழுவதும் இதை கட்டாயமாக்கினால் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இல்லாத கிராம மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com