

அந்த காலத்தில் மந்திரிகளும், மன்னரும் மக்களிடையே மாறுவேடத்தில் சென்று தங்களின் நகரங்களின் உண்மையான தன்மையை அறிய முற்படுவார்கள் என்று படித்துள்ளோம். தற்காலத்திலும் அதே போல் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பொதுமக்களுடன் ரோட் ஷோ நடத்துவது மற்றும் அவர்களுடன் கலந்துரையாடுவது, விளையாடுவது போன்ற உற்சாக செயல்களில் ஈடுபடுவதைக் காண்கிறோம் அந்த வகையில் சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நலத்துறை (Minorities Welfare & Non-Resident Tamils Welfare) அமைச்சரான நாசர் திருவள்ளூர் அறிவியல் பூங்காவில் அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் உடன் பேட்டரியில் இயங்கும் தொடர்வண்டியை ஓட்டி உற்சாகமாக பயணித்தது அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா (Road Safety + Science Park / STEM Park)வையும், முதல்வர் படிப்பகத்தையும் திறந்து வைத்த அமைச்சர் நாசர் அங்கிருந்து மாணவ மாணவிகளுடன் உரையாடி பேட்டரியில் இயங்கும் தொடர் வண்டியில் அவர்களை ஏற்றுக் கொண்டு தானே அதை ஓட்டியும் மகிழ்ந்தார்.
மாநில அரசு கல்விக்காக எடுக்கும் முன்னெடுப்புகளில் மிகச் சிறந்ததாக அனைவராலும் பாராட்டப்படும் பாராட்டப்படுகிறது இந்த அறிவியல் பூங்கா. குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட மாணவ மாணவிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.
இது குறித்து அமைச்சர் நாசர் கூறும் போது " சுமார் 5 1/2 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த அறிவியல் பூங்கா வருங்காலத்தில் மாணவச்செல்வங்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உணர்வோடு அறிவியல் சார்ந்த பூங்காவாகவும் அரசு பணிகளுக்காக படிக்கும் பிள்ளைகள் குரூப் ஸ்டடிஸ் பயிலும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட இந்தப் பூங்காவை மாணவர்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்துள்ளோம்.
இது போன்ற அறிவியல் சார்ந்த திட்டங்களை தமிழகமெங்கும் முதல்வரால் அர்பணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் பூங்காவில் உள்ள மரங்களுக்கு சேதாரம் இல்லாமல் அவற்றையும் இணைத்தே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிட வேண்டும்..
இதில் wiFi வசதியுடன் அறிவியல் உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் சாதனங்கள் அவர்கள் ஆர்வத்தை வளர்த்து மேலும் அவர்களை அறிவியலை அறிந்து கொள்ள உதவும் " என்றார்.
பூங்காவில் மாணவச்செல்வங்கள் எளிதில் கற்றுக் கொள்ளும் வகையில் பல சிறப்பம்சங்கள் உள்ளது. உதாரணமாக “சாலை விழிப்புணர்வு” பகுதியில், சாலை சிக்னல்கள், வழித்தடங்கள், சாலைத்தடப் பாதைகள், சந்திப்புகள் — ஆகியவற்றை மாடல் வடிவில் அமைத்து, சிறுவர் மற்றும் பொதுமக்களுக்கு நிஜமான போக்குவரத்து விதிகளையும், பாதுகாப்பு நடைமுறைகளையும் கற்றுத்தரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் “பகுப்பு-நீதியான (theoretical) அறிவுப் பாடங்களை” நேரடி அனுபவம் மூலம் உணர உதவும் வண்ணம் அமைந்துள்ளது இந்த அறிவியல் பூங்கா. மேலும் அனைவரும் போக்குவரத்து விதிகள், சாலை நடைமுறைகள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பெறலாம்.குறிப்பாக அரசுப்பள்ளி/மத்தியப்பள்ளி மாணவர்கள் — கல்வித் பாடங்களை சுலபமாக, விளையாட்டுப் போன்ற முறையில் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். பொழுதுபோக்காக கல்வியை புகுத்தும் இந்த பூங்கா பிள்ளைகளுடன் பெரியவர்களும் வந்து ரசிக்கும் வகையில் இருக்கும் .
அங்கு வந்த மாணவி ஒருவர் " இங்குள்ள சோலார் சிஸ்டம் சிறுவர் முதல் அனைவருக்கும் விளக்கும் வகையில் அருமையாக உள்ளது" என்று சொன்னதும் மற்றொரு மாணவி "மற்ற இடங்களில் படிக்க தடை வரும் குரூப் ஸ்டடிஸ் இங்கு எந்த தொந்தரவுமின்றி படிக்கலாம்" என மகிழ்ந்ததும் "அனைத்து புத்தகங்களும் உள்ள முதல்வர் பதிப்பகம் எதையும் அறிந்து கொள்ள எளிதாக உள்ளது" என்ற பெண்ணும் இதற்கு சான்று.
எந்த நல்ல திட்டங்களும் மக்களுக்கு பயன் தரும் வகையில் செயல்பட்டால் நல்லதுதானே?