.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஒரு மத்திய அரசு சார்ந்த வேலைவாய்ப்பாகக் கருதப்படுகிறது. திருச்சி, மதுரை, சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் தோராயமாக ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
நிறுவனம் : NABARD Financial Services Limited (NABFINS)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : பல்வேறு
பணியிடம் : தமிழ்நாடு – திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம்
ஆரம்ப நாள் : 30.10.2025
கடைசி நாள் : 15.11.2025
பதவி: Customer Service Officer (CSO)
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருந்தால் போதுமானது.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். விண்ணப்பதாரர்களின் ஆளுமை, தகவல் தொடர்புத் திறன் மற்றும் அடிப்படை அறிவைச் சோதிக்க நேர்காணல் அமையும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://nabfins.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
