

காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கனவு பலருக்கு இருக்கும். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு காவல் துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ்நாடு காவல்துறையில் கடலோர பாதுகாப்புக் அதிவிரைவுப்படகுகளை இயக்கவும், பராமரிப்பு பணிக்கும் பணியாளர் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் கடலோர பாதுகாப்புக் குழுமத்திலுள்ள அதிவிரைவுப்படகுகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக வருடாந்திர ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்பட்டால், நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய 1.12.2025 நாளன்று 50 வயதுக்குக் கீழுள்ள தகுதி வாய்ந்த முன்னாள் இந்திய கடலோர காவல் படை மற்றும் முன்னாள் இந்திய கடற்படை வீரார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு தேவையான தகுதிகள், ஊதியம், எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
பணி விவரம்- மாத ஊதியம் :
பதவி : காவல் உதவி ஆய்வாளர் (படகு தொழில்நுட்ப ஆளிநர்)
பணியிடங்கள்: 10
ஊதியம்: ரூ.36,900 மற்றும் இதர படிகள்
பதவி: தலைமை காவலர் ( படகு தொழில்நுட்ப ஆளிநர்)
பணியிடங்கள்: 41
ஊதியம்: ரூ.20,600 மற்றும் இதர படிகள்
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி உரிய ஆவணங்களை அதனுடன் இணைந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
முகவரி
கூடுதல் காவல் துறை இயக்குநர்,
கடலோர பாதுகாப்பு குழுமம்,
காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகம்,
டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை,
மைலாப்பூர்,
சென்னை-4
கடைசி நாள் : 17.12.2025
அனுப்பப்படும் விண்ணப்பப்படிவங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, வாய்மொழி தேர்வு போன்றவற்றுக்கு தனிப்பட்ட அழைப்பு கடிதங்கள் மூலம் அழைக்கப்படுவார்கள்.
தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அறிந்து கொள்ளவும், மாதிரி விண்ணப்ப படிவம் பெறுவதற்கும் https://drive.google.com/drive/folders/1I8xcdsoXM9RH-O--ySMT2wJCoEXtWskh என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.