பொதுமக்கள் கவனத்திற்கு..!ரேஷன் கடைகளின் நேரம் மாற்றம்..?

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளின் வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ரேஷன் கடை
Ration shop|ரேஷன் கடை
Updated on

தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் என்கிற ரேஷன் கடைகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகள் மூலம் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி,கோதுமை, சக்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மானிய விலையிலும், இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் வட தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கடைகளின் நேர மாற்றம் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதாவது, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது. இதில் மதிய உணவு நேரத்தில் மட்டும் இரண்டு மணி நேரம் ஓய்வு வழங்கப்படுகிறது. அதன்படி, மதிய இடைவேளை நேரம் நீட்டிக்கப்பட்டு, பணி நேரம் சுமார் 12 மணி நேரமாக உள்ளது.

சர்வதேச அளவில் 8 மணி நேரம் வேலை என்பது ஊழியர்களின் அடிப்படை உரிமையாக பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது, மதிய உணவு இடைவேளை இரண்டரை மணி நேரம் விடப்பட்டாலும், வெளியூரில் இருந்து வந்து ரேஷன் கடைகளில் வேலை செய்பவர்கள் தொடர்ச்சியாக ரேஷன் கடைகளிலேயே இருக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் ஊழியர்கள் காலை முதல் இரவு வரை ரேஷன் கடையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மனச்சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ration shop
ration shop

அதன்படி, ரேஷன் கடை வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மாற்றி மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் உள்ளது. ஆனால், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் இருப்பதால், குடும்பத்தோடு நேரம் செலவிடுவது குறைவதாக ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். எனவே இதிலும் மாற்றங்கள் வேண்டும் என்கின்றனர். அதன்படி, மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் வேலை நாட்களாக வைத்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
Ration Card status check: ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!
ரேஷன் கடை

அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாளாக பின்பற்றலாம். மாதத்தில் அடுத்து வரும் 2 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை நாட்களாக வைத்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இணை பதிவாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுவின்படி, மாற்றங்களைச் செயல்படுத்தினால் கள அளவில் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, அது குறித்து அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துணைப்பதிவாளர்களுக்கு பொது வினியோகத்திட்டத்தின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக துணைப்பதிவாளர்களுக்கு பொது விநியோக திட்ட இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தவில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கை மனு தொடர்பாக ஆய்வு செய்து வார விடுமுறை, பணி நேரம் தொடர்பாக மாற்றம் செய்வதால் ஏற்படும் சிக்கல்கள், சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அது குறித்து அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கார்டு e-KYC செய்யலையா..? இன்றும் நாளையும் சிறப்பு முகாம்! உடனே போங்க..!
ரேஷன் கடை

எனவே இந்த ஆய்வு அறிக்கையின் படி விரைவில்சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடுமுறை மற்றும் பணி நேரம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com