ரேஷன் கார்டு e-KYC செய்யலையா..? இன்றும் நாளையும் சிறப்பு முகாம்! உடனே போங்க..!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைவிரல் ரேகை (e-KYC) பதிவு செய்யும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
ration card linked e-KYC
ration card linked e-KYCAI Image
Updated on

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று (ஆகஸ்ட் 8) மற்றும் ஆகஸ்ட் 9-ம்தேதி (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் கைவிரல் ரேகை (e-KYC) பதிவு செய்யும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதுவரை விரல் ரேகை பதிவு (இகேஒய்சி) செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் மற்றும் ஆதார் கார்டுகளுடன் நேரில் சென்று கைரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் சிலர் ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்களை இன்னும் நீக்காமல் வைத்துள்ளனர்.

எனவே அவற்றை சரி செய்ய ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பெறப்படுகிறது. மேலும் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான ரேசன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடைக்கு சென்று பதிவு செய்வது அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை ( இகேஒய்சி -eKYC)) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இன்னும் சுமார் 8 லட்சம் உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யாமல் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது.

ரேஷன் கார்டு e-KYC|ரேஷன் கார்டு
ரேஷன் கார்டு e-KYC|ரேஷன் கார்டு

தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நியாய விலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகள்) இகேஒய்சி (eKYC) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

விரல் ரேகை பதிவு செய்யாத கார்டுதாரர்களின் வசதிக்காகவும், eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டும் இன்று (ஆகஸ்ட் 8) மற்றும் நாளை (ஆகஸ்ட் 9) ஆகிய இரண்டு தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி ரேஷன் கடைகளில் பணியாளர்கள் எடை போட தேவையில்லை! வந்தாச்சு டிஜிட்டல் பாக்கெட் சிஸ்டம்!
ration card linked e-KYC

இந்த சிறப்பு முகாம்கள் இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆகவே, ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள், ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள குழந்தைகள் தவிர்த்து அனைத்து உறுப்பினர்களும் தங்களின் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று விரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பணி நிமித்தமாக வேறு ஊர்களில் இருப்பவர்கள் அங்கு அருகில் உள்ள எந்த ரேஷன் கடைக்கும் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு செல்பவர்கள் ஆதார் அட்டை நகலையும் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:
நெல் கொள்முதல் முதல் ரேஷன் கடை வரை: அனைத்து புகார்களுக்கும் உதவி எண்கள் அறிவிப்பு!
ration card linked e-KYC

இச்சிறப்பு நடவடிக்கையின் மூலம் போலி ரேஷன் அட்டைகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்குத் தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com