சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி தமிழுக்கு தான் முதலிடம்: முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி சட்டசபையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய்.
high court. CM vijay
high court. CM vijay
Updated on

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை. பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன் பேசப்படும் மொழி தமிழ் மொழி என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

வருங்கால தலைமுறைக்கும் தமிழ் மொழியின் வளத்தையும் பெருமையையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை என்று கூறிய முதலமைச்சர், தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று கூறினார்.

வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு சட்டத் தமிழ் பயிற்சி தேவை என்றும் அவர் கூறினார்.

தமிழில் பேசுவதை ஆங்கிலத்திலும் கேட்க உதவும் வகையில் AI முன்னேற்றம் கண்டுள்ளது.

நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம். மாநில மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்த சட்ட வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை. குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று முதமைச்சர் விஜய் கூறினார்.

தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது. எனவே தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகளை தமிழில் வழங்க வேண்டும் என்றார்.

ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com