புதுச்சேரியில் த.வெ.க. பொதுக்கூட்டம் - தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை..!

TVK Vijay
TVK Vijay
Published on

புதுச்சேரியில் கடந்த 5-ம்தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 'ரோடு ஷோ' நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்றாலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் வரும் 9-ம்தேதி (நாளை) (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை, 2 மணி நேரம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் நடைபெற இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் பழைய துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்போ மைதானத்தில் பள்ளமான இடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் மணல் கொட்டி சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எப்போது போலவே த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார மேடை ஏதும் அமைக்காமல் பேருந்தில் நின்ற படியே பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் மைதானம் முழுவதுமாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மைதானத்திற்கு உள்ளே வருவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் த.வெ.க. தலைவர் விஜய் வந்து செல்வதற்கு தனியாக தற்காலிக நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது என்பதற்காக புதுச்சேரி காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

* 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி.

* தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை.

* 5000 பேருக்கும் ‘கியூ-ஆர்' கோடுடன் கூடிய பாஸ் வழங்க வேண்டும்.

* கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் ஹெலிபேடு நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

* அனுமதி வழங்கப்பட்டுள்ள 5000 பேரின் ‘கியூ-ஆர்' கோடுடன் கூடிய பாஸ்களை பாதுகாப்பு போலீசார் சோதனை செய்த பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

* மைதானத்தில் அனைவருக்கும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்டவைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

* மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் இருக்க வேண்டும்.

* முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை.

* பாதுகாப்பு பணியில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
த.வெ.க மாநாடு: "இரண்டு பேருக்கு மத்தியில் தான் போட்டியே. ஒன்று டிவிகே. இன்னொன்று டிஎம்கே!"
TVK Vijay

மேலே சொன்ன இந்த கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com