#BREAKING : திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்..!

VIJAY STALIN
VIJAY STALINimage source:NDTV
Updated on

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் வெற்றி பெற்றது விஜயின் தவெக கட்சி.

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களுக்காக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் நேற்று பதவியேற்றது தவெக கட்சி.

நேற்று காலை பதவியேற்பு நிகழ்வில் வந்தே மாதரம் பின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு  இறுதியாக தமிழ்த் தாய் வாழ்த்து ஒலித்து சி. ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் குறிப்பிட்ட  9 எம்எல்ஏக்கள் மட்டும் தமிழக அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்வை தமிழ்நாட்டு மக்கள் கண்டு களிக்கும்படி சென்னையில் ஆங்காங்கே எல்இடி திரைகள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . மேலும் அரசியல் கட்சியை சார்ந்த பல பிரபலங்கள் பங்கேற்ற நிலையில் கூட்டணி கட்சிகளில் இருந்து காங்கிரஸ் தலைவர்  ராகுலுக்கு மேடையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

இன்று கூடிய சட்டப்பேரவையில் தவெக கட்சியின் தலைவர் ஆன விஜய் மற்றும் தவெக,திமுக ,அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்களும் பதவியேற்ற நிலையில்  மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தம் சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


திமுகவை தனது எதிரியாக பிரச்சாரம் செய்து பல தடைகளை தாண்டி வெற்றி பெற்ற நிலையில் அதன் தலைவரான மு.க. ஸ்டாலினை விஜய் சந்திப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அரசியல் களத்தில் வரவேற்கப்படுகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலினை  பிற்பகல் 2:30 மணி அளவில் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அடுத்தடுத்து மூத்த தலைவர்களை சந்திக்கும் விஜய் இன்று மு.க. ஸ்டாலினை சந்திப்பது டன் மேலும் மூத்த அரசியல்வாதியான மதிமுக கட்சியின் செயலாளர் வைகோ அவர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சனி ஓரையில் முதலமைச்சராக பதவியேற்கும் விஜய் - தவெக-வின் அரசியல் பயணம் இனி எப்படி இருக்கும்..?
VIJAY STALIN
logo
Kalki Online
kalkionline.com