23 வயதில் உரிமையியல் நீதிபதியான பழங்குடியின பெண்!

நீதிபதி ஸ்ரீபதி
நீதிபதி ஸ்ரீபதி

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் மலை கிராம பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஸ்ரீபதி தன்னுடைய 23 வயதில் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக தேர்வுச் செய்யப்பட்டு சாதனைப்படைத்துள்ளார்.

வெங்கட்ராமன் என்பவரின் மனைவி ஸ்ரீபதி, கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையில் நீதிபதி தேர்வில் பங்கேற்றார். இந்த தேர்வில்  ஸ்ரீபதி வெற்றி பெற்றுள்ளார். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத மலை கிராமமான ஜவ்வாது மலையில் படித்த பெண் ஸ்ரீபதி, முதல் மழைவாழ் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தனது 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீபதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.    அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே காதலர் தினப் பரிசுகளைச் செய்யலாம் வாங்க!
நீதிபதி ஸ்ரீபதி

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில்,”பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்! சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!

“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன் னேறவேண் டும்வைய மேலே!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com