தமிழக அரசு விருது அறிவிப்பு : அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது..!

தமிழக அரசு
தமிழக அரசு
Published on

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விபரம் பின்வருமாறு:

* அண்ணா விருது - அமைச்சர் துரைமுருகன்

* அம்பேத்கர் விருது - விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன்

* காமராஜர் விருது - எஸ்.எம்.இதயத்துல்லா

* மகாகவி பாரதியார் விருது - கவிஞர் நெல்லை ஜெயந்தா

* பாரதிதாசன் விருது- கவிஞர் யுகபாரதி

* தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது – முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு

* திருவள்ளுவர் விருது- முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

* முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பிக்கும் வழங்கப்பட உள்ளது.

விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அன்று 5 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி - டிரம்ப் அதிரடி..!இந்தியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து..!
தமிழக அரசு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com