தமிழ்நாட்டில் ரூ.540 கோடிக்கு முதலீடு செய்த ஸ்பெயின் நிறுவனம்.. முதலவர் முன்னிலையில் கையெழுத்து!

Tamilnadu Government MoU with Edibon Company for 540 cr
Tamilnadu Government MoU with Edibon Company for 540 cr

மிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் மேப்ட்ரீ ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசியதுடன், எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில், வாகன உதிரிப் பொருட்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான கெஸ்டாம்ப் நிறுவனம், பொறியியல் வடிவமைப்பு மற்றும் தொழிற்கல்விக்கான கருவிகளை உற்பத்தி செய்யும் எடிபோன் நிறுவனம்,

இரயில் உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான டால்கோ நிறுவனம், உயர்தொழில்நுட்ப உயிரியல் பொருள்களின் ஆராய்ச்சியையும் உற்பத்தியையும் மேற்கொள்ளும் மேப்ட்ரீ நிறுவனம் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த உயர் நிர்வாகிகளைச் சந்தித்து, வளமான வாயுப்புகள் உள்ள தமிழ்நாட்டில் நிலவும் தொழில் முதலீட்டுக்கான சூழல்களை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பின் பலனாக எடிபான் நிறுவனத்துடன் ரூ.540 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. இச்சந்திப்பின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, 'Guidance' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் படியுங்கள்:
Toxic மனிதர்களை அடையாளம் கண்டுக்கொள்ள 6 சிறந்த வழிகள்!
Tamilnadu Government MoU with Edibon Company for 540 cr

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com