பெண்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடனுதவி..!!

Tamilnadu government
Tamilnadu government
Published on

பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், மேலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவி, திருமண உதவித் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் தொழில் தொடங்கவும் உதவிகள் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் பெண்களின் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை பெறுகின்றனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் திருமணத்திற்கு ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம், உயர்கல்வி(டிகிரி படித்த) பெண்களுக்கு ரூ.50,000 மற்றும் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு பிங்க் ஆட்டோ திட்டம் (Pink Auto Scheme) என்ற புரட்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு சுயமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வரை வழங்கப்படுகிறது.

அந்தவகையில், பெண்கள் மின்சார ஆட்டோவை பெறுவதற்கான கடனுதவியையும் நம்முடைய தமிழக அரசு செய்து வருகிறது. இந்த பின்னணியில்தான், மின்சார ஆட்டோ வாங்க, பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் புதிய திட்டம் கூட்டுறவு வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ளது..

இந்த திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மின்சார ஆட்டோ வாங்குவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை, 9 சதவீத வட்டியில் கடன் பெற முடியும்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம் தொடங்கி வெறும் 5 மாதங்களிலேயே, எதிர்பார்த்ததை விட அதிகமான பெண்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்..

இந்த திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் கடன் பெற தேவையான தகுதிகள் மற்றும் ஆவணங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

* விண்ணப்பதாரர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

* தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

* 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும்.

* குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இன்று முதல் தமிழகத்தில் பிங்க் ஆட்டோ!
Tamilnadu government

* பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள்

* ஆதார் கார்டு

* ரேஷன் கார்டு

* வாக்காளர் அடையாள அட்டை அல்லது முகவரி சான்று

* வருமான சான்றிதழ்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com