சர்ரென உயர்ந்த மளிகை பொருட்கள் விலை.. சீரகம் விலையை கேட்டால் தலையே சுற்றுகிறது!

சர்ரென உயர்ந்த மளிகை பொருட்கள் விலை.. சீரகம் விலையை கேட்டால் தலையே சுற்றுகிறது!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

காய்கறி விலையை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் ஏறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சாதரணமாகவே பெட்ரோல் விலை, தங்கம் விலை, மின் கட்டணம் என அடுத்தடுத்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அடிப்படை வாழ்க்கையை வாழ முடியாமல் திணறி வருகின்றனர். அதன் அடுத்த வகையில் தக்காளி விலை சதமடித்து பலரையும் விழிப்பிதுங்க செய்தது. பொதுமக்கள் அடுக்கடுக்காக இந்த அதிர்ச்சிகளையே தாங்க முடியாத நிலையில், தற்போது மளிகை பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

வரத்துக் குறைவு காரணமாக சென்னையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. துவரம் பருப்பின் விலை கிலோ 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 118 ரூபாயாக இருந்த ஒரு கிலோ துவரம் பருப்பு விலை தற்போது 160 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பாசிப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் 20 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளன

சீரகத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ 365 ரூபாயில் இருந்து 540 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அத்துடன், மிளகு கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேவேளையில் 130 ரூபாயாக இருந்த பாமாயில் விலை படிப்படியாக குறைந்து தற்போது 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அரிசியை பொறுத்தவரை 6 மாதங்களுக்கு முன்பு 900 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 25 கிலோ எடை கொண்ட சாதா பொன்னி அரிசி மூட்டை, தற்போது 1050 ரூபாயாகவும், நடுத்தர பொன்னி அரிசி 1,250ல் இருந்து 1,500ஆகவும் அதிகரித்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட பச்சரிசி மூட்டையும் 1,500ஆக உயர்ந்துள்ளது.