கயிறு கட்ட தடை முதல் கோடிங் கிளாஸ் வரை: தமிழக பள்ளிகளில் அமலாகும் 2 முக்கிய மாற்றங்கள்!

கருப்பு கயிறு
கருப்பு கயிறு
Updated on

தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் (Coding) முறைகளைக் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் பள்ளியில் சாதி மதம் அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பள்ளிகள் மேம்பாடு குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர் சந்திப்பில், முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.அதில் இரண்டு விஷயங்கள் தற்போது கல்வித்துறை மற்றும் மக்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழகத்தில் முதற்கட்டமாக 5000 பள்ளிகளை கோடிங் கற்றுத் தரப்படும் என்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

குறிப்பாக மாணவர்களுக்கு ஏஐ, கோடிங், பைதான்மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆகிய நவீன தொழில்நுட்பங்கள் கற்றுத் தரப்படும்.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி:

இந்த வகுப்புகளை நடத்துவதற்காக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.இந்தத் திட்டம் மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுவதாக தெரிகிறது.

மேலும் இந்தாண்டு தேர்ச்சியாக 10 ஆம் வகுப்பு 94.3 சதவீதம் மற்றும் 12 ஆம் வகுப்பு 95.2 சதவீதம் பெற்று நல்ல நிலையில் இருந்தாலும் இது போதாது என்றும் மேலும் பலவிதமான விதங்களில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆலோசித்து வருவதாகவும் குறிப்பாக தேர்ச்சியில் இடம்பெறாத மெல்லக் கற்கும் குழந்தைகளையும் மேம்படுத்தும் விதமாக கல்வி இருக்க வேண்டும் என கூறியது வரவேற்பைப் பெற்றது.

மேலும் "பள்ளிகள் கற்றல் கூடமாக மட்டுமின்றி கற்பனைகளை சாத்தியப்படுத்தும் சாதனைக் கூடமாகவும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அமைய வேண்டும் என்றும் அதை நோக்கிய இலக்கு தான் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கோடிங் பயிற்சியும் ஏஐ தொழில்நுட்ப பயிற்சியும்" என அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மதம், ஜாதி அடையாளங்களோடு உதாரணமாக கைகளில் கயிறு போன்றவைகள் அணிந்து கல்வி வளாகத்துக்குள் யாரும் வரக்கூடாது என்றும் பிரிவினையை தூண்டக்கூடிய வேற்றுமை வளர்க்கும் எதற்கும் பள்ளிக்குள் இடமில்லை எனவும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

school students
school students

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மதம், ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தை அமைச்சர் வலியுறுத்தியதன் முக்கிய நோக்கம், கல்வி வளாகங்கள் அனைவருக்கும் சமமான மற்றும் பாகுபாடற்ற இடமாக இருக்க வேண்டும என்பதாகும்.

பள்ளி மற்றும் கல்லூரிகள் கல்வி கற்பதற்கான இடம் மட்டுமே என்றும் மதம், ஜாதி, அரசியல் வேறுபாடுகள் மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடாது என்பதும் ,மாணவர்களின் அடையாளம் என்பது அவர்களின் திறமை, கல்வி மற்றும் ஒழுக்கம் மூலம் மட்டுமே அமைய வேண்டும் என்ற நோக்கமே இந்த அறிவிப்பின் பின்னணி என்று கருதப்படுகிறது.

கல்வி வளாகங்களில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த அறிவிப்பை பார்த்தாலும் இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.பெரும்பாலான கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கல்வி நிலையங்கள் மத-ஜாதி வேறுபாடுகளற்ற இடங்களாக இருக்க வேண்டும் என்பதால் இந்த நிலைப்பாட்டை வரவேற்றுள்ளனர். அதே சமயம் சில அமைப்புகள் தனிநபர் மத நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்தும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றன.

எவ்விடத்திலும் இந்திய அரசியலமைப்பு சட்ட ரீதியாக மதச்சார்பற்ற தன்மையையும், மத சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது. அதே நேரத்தில் கல்வி நிறுவனங்கள் ஒழுங்கு மற்றும் சமத்துவத்தைப் பேணுவதற்காக அவர்களுக்கென சில விதிமுறைகளை வகுக்கலாம்.ஆகவே இத்தகைய அறிவிப்புகள் நடைமுறையில் எவ்வாறு அமல்படுத்தப்படுகின்றன என்பதும் போக போகத்தான் தெரியும் என்றும் தற்போது இந்த அறிவிப்பு மீதான முக்கியமான விவாதமாக மாறியுள்ளது என்றே கூறலாம்.

இதையும் படியுங்கள்:
கொசுவை கொல்ல கொசுவே ஆயுதம்..! அமெரிக்காவில் 3 கோடி கொசுக்களை பறக்கவிடும் கூகுள்..!
கருப்பு கயிறு
logo
Kalki Online
kalkionline.com