

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிந்து விட்டாலே கொண்டாட்டம் தான். ஏனென்னா அப்போ தான் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும். அந்த வகையில் தமிழகத்தில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதாவது டிசம்பர் 24 முதல் சுமார் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்,இந்த ஆண்டு மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அதாவது,மூன்று நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் தங்களது விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.புதுவருடம் தொடங்கி ஜனவரி 5ம்தேதி 12 நாட்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு விடுமுறை காலங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என பள்ளிநிர்வாகத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் ஜனவரி 5-ம்தேதி பள்ளிகள் திறந்த உடன் மாணவர்களை மேலும் குஷியாக்கும் வகையில் ஒரு இனிப்பாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது 2026-ம் ஆண்டு தொடங்க இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் புத்தாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வருகிறது.
ஏற்கனவே அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு ஜனவரி தொடக்கத்தில் 4 நாட்கள் விடுமுறையை மாணவர்கள் கழித்த நிலையில் 15-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகை விடுமுறை தொடங்குகிறது. இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
அதாவது, 15-ந்தேதி பொங்கல் பண்டிகையும், 16-ந்தேதி திருவள்ளுவர் தினமும், 17-ந்தேதி உழவர் தினமும், ஞாயிறு விடுமுறை தினம் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. அதனை தொடர்ந்து ஜனவரி மாதம் வரும் குடியரசு தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வருகிறது.
அதாவது குடியரசு தினம் திங்கள் கிழமை வருகிறது. அதற்கு முன்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் திங்கள் கிழமை வரும் குடியரசு தினத்தையும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. ஆகமொத்தம் 2026 ஜனவரி மாதத்தில் மட்டும் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவ- மாணவிகள் குஷியில் உள்ளனர்.
இந்த அரசு விடுமுறை அனைத்து அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.