பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப 2,605 சிறப்பு பேருந்துகள்!

போக்குவரத்து கழகம் ஏற்பாடு!
பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப 2,605 சிறப்பு பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்றைய தினம் முதல் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் குவிய துவங்கியுள்ளது.

அவர்கள் எந்தவித சிரமுமின்றி வந்து சேர்வதற்கு ஏதுவாக நேற்றைய தினம் 3500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன, அதே போன்று இன்றைய தினமும் 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட கடந்த 13-ஆம் தேதி, லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்தும், பிற ஊர்களில் இருந்தும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களின் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதன் மூலம் அவர்கள் கூட்ட நெரிசல் இன்றி சொந்த ஊர்களுக்கு பயணத்தை மேற்கொண்டனர். அவர்களெல்லாம் சிரமமின்றி மீண்டும் ஊர் திரும்புவதற்கான சிறப்பு பேருந்துகளின் இயக்கமானது நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நேற்று காணும் பொங்கலை முடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளனர்.காணும் பொங்கல் முடிந்து வருவோரின் வசதிக்காக நேற்றைய தினம் 3500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்றைய தினமும் இதனை தொடர்ந்து ஊர்களில் இருந்து வருபவர்களின் வசதிக்காக 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கணிசமான அளவு இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் மக்கள் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப வந்து கொண்டுள்ளனர். இதனால் பயணிகளின் சிரமங்கள் சற்று குறைந்துள்ளதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com