ஆவினும் தொடரும் விலை உயர்வுகளும் ......! வெண்ணை, நெய் விலை ...கிர்..கிர் ...!

Aavin butter
Aavin butter

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின், தனது ஆவின் வெண்ணெய் விலையை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது.பொங்கல் போன்ற பண்டிகை காலங்கள் வரும் சுழலில் இது போன்ற தினம்தோறும் விலை உயர்வு நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி வருகிறது.

ஆவின் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு விற்கப்பட்ட இனிப்புகளில் தரமில்லை என புகார்கள் எழுந்திருந்தது . அதன் பிறகு ஆரஞ்ச் நிற பால் பேக்கெட்களின் விலை ரூபாய் 12/- உயர்த்தப்பட்டது சர்ச்சையாகியது. அதன் பிறகு நெய் விலை உயர்வு என விலை உயர்வும் சர்ச்சைகளும் வாடிக்கையாகி வருகிறது.

butter
butter

தற்போது ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெய்யின் விலையும் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தி ஆவின் நிர்வாகம் நேற்று அறிவித்தது.

கடந்த மார்ச் 4-ந் தேதி லிட்டருக்கு ரூ.20, கடந்த ஜூலை 21-ந் தேதி ரூ.45 என்ற அளவில் ஆவின் நெய்யின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது லிட்டருக்கு ரூ.50 என்ற அளவில் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நெய்விலையை தொடர்ந்து தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் ரூ.52ல் இருந்து 55 ஆகவும், 500 கிராம் ரூ.250ல் இருந்து ரூ.260 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com