மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதே அதிமுகவின் முடிவு: முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி!

மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதே அதிமுகவின் முடிவு: முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி!

மிழகத்தைப் பொருத்தவரை தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் பாஜகவினர் மிக உறுதியாக இருக்கின்றனர். ஆனால், அதே சமயம் இங்கிருக்கும் திராவிடக் கட்சிகள் அதை பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் போதே அதை கடுமையாக விமர்சிப்பவர்களும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இருந்து வரும் நிலையில் அந்த கருத்தை முறியடிக்கும் வகையில் முன்னாள் அமைச்சரும், எடப்பாடி ஆதரவாளருமான கே.பி.முனுசாமி சமீபத்தில் மோடியே அடுத்த பிரதமராக வர வேண்டுமென்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது என்று கூறி பரபரப்பு கிளப்பினார். அதற்கான காணொளி தற்போது வைரலாகி வரும் நிலையில், முனுசாமி என்ன கூறினார் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

தேசிய நலன் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதனால் அடுத்து யார் பிரதமராக வர வேண்டும் என்பது குறித்து நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.போற்றுதலுக்குரிய நரேந்திர மோடி அவர்கள் தான் மீண்டும் இந்த நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்று நாங்கள் விரும்பு கிறோம்.அதற்கிடையே இது போன்று சிறு சிறு சம்பவங்கள் நடப்பது என்பது, இது ஒரு ஜனநாயக நாடு, பல்வேறு சிந்தனைகள் கொண்டவர்கள் ஒரே கட்சியில் இருப்பார்கள், அப்படி இருக்கிறவர்கள் தங்களது கருத்துகளைச் சொல்லும் போது சில சமயம் ஏற்க முடியாத கருத்துகளைச் சொல்லி விடுவார்கள். அனுபவம் உள்ளவர்கள், அவர்களைத் தட்டிக் கொடுத்து, இப்படிப் பேசி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒதுங்கிச் சென்றால் தான் நாம் நினைக்கும் இடத்தைச் சென்று அடைய முடியும். அதை விட்டு விட்டு விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் இருக்கிற இடத்திலேயே தான் இருக்க வேண்டியதாக இருக்கும். எங்களை இருக்கிற இடத்திலேயே இருக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், அதை ஒதுக்கித் தள்ளி விட்டு எங்களது இலக்கை அடைய நாங்கள் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம் எங்கள் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலே!’ -என்றார் கே.பி. முனுசாமி.

இரு கட்சிகளிடையே முரண்பாடுகள் வலுத்து வரும் நிலையில் கே.பி.முனுசாமியின் இந்தப் பரபரப்பான பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com