டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய வீதியில் போராடிய ஜலகண்டாபுரம் கிராம மக்கள்!

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய வீதியில் போராடிய ஜலகண்டாபுரம் கிராம மக்கள்!

அரசுக்கு பெரும் வருமானம் ஈட்டித்தரும் டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் அமைத்து மக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் அதைக் கண்டித்து போராட்டத்தில் மக்கள் ஈடுபடுவதும் வழக்கமாக நடைபெறும் சம்பவங்களில் ஒன்று. அப்படி விடிய விடிய கடுங்குளிரில் மக்கள் நடத்திய சாலை மரியலைப்பற்றிய செய்திதான் இது.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த இரண்டு மதுபானக்கடைகள் அப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு இடையூறாக இருந்ததால்அந்தக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்லி அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையின் பெயரில் நடவடிக்கை எடுத்த அரசு ஒரு கடையை ஜலகண்டாபுரம் டவுன் பஞ்சாயத்து மயானம் அருகே அமைத்தது. இதற்கு மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக நீடிக்கும் இப்பிரசினையில் மற்றொரு கடையை ஜலகண்டாபுரம் பொடையன் தெரு பகுதியில் திறப்பதற்கு சில மாதங்கள் முன் ஏற்பாடுகள் நடந்தன. இதை அறிந்த மக்கள் நடத்திய போராட்டத்தினால் இங்கு கடை அமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் கடை திறப்பதற்காக  மது பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு இறக்கும் பணியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனை அறிந்த கிராம மக்கள் ஜலகண்டாபுரம் சின்னப்பம்பட்டி சாலையில் பொடையன் தெரு பகுதியில்  இரவு 7:30 மணி அளவில் மக்கள் திரண்டனர்.

தாரமங்கலம் ஊராட்சி தலைவர் சுந்தரம் தலைமையில் அவர்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர் ஒன்றிய குழு தலைவர் பானுமதி பாலசுப்ரமணியம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொணட போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலையில் அமர்ந்து டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்திற்கு மாதர் சங்க நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தாசில்தார் முத்துராஜா துணை போலீஸ் சங்கீதா மற்றும் போலீசார் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனாலும் சமாதானம் அடையாத  கிராம மக்கள் போராட்டம் கடுங்குளிரிரையும் பொருட்படுத்தாது நள்ளிரவு வரை சாலை மறியலில் ஈடுபட்டதால் ஜலகண்டாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் மக்கள் கலைந்துசென்றாலும் மேலும் போராட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் வந்து செல்லும் முக்கியமான மெயின் ரோட்டின் மேல் அமைக்கும் டாஸ்மாக்கினால் பிரச்சினைகள் அதிகம் வரும் என்பதால் அப்பகுதியில் கடை வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் மக்கள் சக்தி  ஜெயிக்கிறதா என்று? 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com