நெல்லை சர்ச் அருகே மர்மபொருள் வெடித்து சிதறியது - மக்கள் அச்சம்

நெல்லை சர்ச் அருகே  மர்மபொருள் வெடித்து சிதறியது - மக்கள் அச்சம்

திருநெல்வேலி டவுனில் உள்ள குற்றாலம் ரோட்டில் சிஎஸ்ஐ தேவாலயம் ஒன்று உள்ளது. அதன் அருகே பரோட்டா கடையும் உள்ளது. அதனை சுற்றிய இடங்களில் சிலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அங்கு நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் வெடித்து சிதறியது. இதைக்கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இச்செய்தி அங்கு காட்டுத் தீ போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்திய நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மர்மபொருள் வெடித்ததாக கூறப்பட்ட இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர். அங்கு இருந்த சில பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த ஆண்டு அதிகாலை 4 மணியளவில் சென்ற கார் திடீரென்று வெடித்து சிதறியது. காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காரில் இருந்த ஜமேஷா முபின் இறந்தார்.

இதுதொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சதிச்செயல்களாக இருக்கலாம் என்ற நோக்கத்தில் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சர்ச் அருகே உள்ள பரோட்டா கடையில் அய்யப்பன் என்பவர் தனது உறவினருடன் நின்ற நிலையில் கார் ஒன்று சென்றதும், அந்த காரில் இருந்தவர்கள் வீசிய மர்மபொருள் தான் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இது முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் மர்மபொருள் வெடித்ததற்கான காரணம் என்ன? அது எப்படி தயாரிக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. அதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 இதற்கிடையே மர்மபொருள் வெடித்ததால் திருநெல்வேலியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனால் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com