

தமிழகத்தில் நிலம் தொடர்பான முறைகேடுகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஒரு செயலி(APP) இருந்தால் போதும் உங்களுடைய நிலத்தின் உடைய மொத்த ஜாதகத்தையும் இந்த ஆப்பின் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த ஆப் மூலம், நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை பொதுமக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள பட்டா / சிட்டா விவரங்களை வீட்டில் இருந்தே பார்வையிடலாம். ஒரே இடத்தில், உரிமையாளரின் பெயர், நில பரப்பளவு, பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
தமிழ்நிலம் ஜியோ-இன்போ ஆப் (TamilNilam Geo-Info) இது தமிழ்நாடு அரசின் சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறையின் இருப்பிட அடிப்படையிலான வரைபடச் சேவைப் பயன்பாடாகும்.
இவை தமிழ்நாடு நில ஆவணங்கள், பட்டா, சிட்டா, மற்றும் வரைபட விவரங்களை மொபைலில் பார்க்க உதவுகின்றன, நிலத்தின் வகை, உரிமையாளர் விவரங்கள், பட்டா மாற்ற விண்ணப்ப நிலை போன்றவற்றை எளிதாகப் பெறலாம்.
TamilNilam Geo-Info வரைபட அடிப்படையிலான செயலி. வரைபடத்தில் கிளிக் செய்வதன் மூலமோ அல்லது சர்வே எண்ணை உள்ளிடுவதன் மூலமோ நிலத்தின் விவரங்கள், உரிமையாளர் தகவல்கள், FMB ஓவியங்கள் போன்றவற்றை வரைபடத்துடன் இணைத்துப் பார்க்க உதவுகிறது.
TamilNilam Geo-Info செயலி மூலம் உங்களுடைய நிலத்தின் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
உங்களுடைய செல்போனில் பிளே ஸ்டோருக்கு(Play Store) சென்று தமிழ்நீளம் ஜிஇஓ இன்போ (tamilnilam geo info) என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளவும. பின்னர் உங்களுடைய மொபைல் நம்பரை கொடுத்து லாகின் செய்து கொள்ளவும். லாகின் கொடுத்தவுடன் ஸ்கிரீனில் பேஜ் ஓபன் ஆகும்.
அதில் சர்ச் ஐகான்(search icon) பக்கத்தில் இருக்கும் லொகேஷன் சிம்பிளை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்திற்கு போகும். அதில் ஃபில்டர் செக்ஷன் தெரியும்.
அதில் நீங்கள் வாங்கிய நிலத்தின் உடைய மாவட்டம், தாலுக்கா, கிராமம்(village), சர்வே நம்பர் அனைத்தையும் சரியாக அதில் பதிவிட்ட 5 நிமிடத்தில் உங்களுடைய நிலத்தின் வியூ ஸ்கிரீனில் தெரியும்.
பின்னர் அதன் பக்கத்தில் கீழே உள்ள A Register என்பதை கிளிக் செய்தால் அந்த நிலத்தின் சொந்தக்காரர் உடைய அனைத்து விவரங்களும் ஸ்கிரீனில் வந்து விடும்.
அடுத்து அதற்கு கீழே உள்ள FMB sketch என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களுடைய நிலத்தின் நில அளவை துல்லியமாக ஸ்கிரீனில் பார்த்து கொள்ள முடியும்.
அடுத்து கடைசியாக உள்ள Patta number என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் நிலத்தின் உடைய பட்டா நம்பரை அதில் பதிவிட்டால் ஸ்கிரீனில் உங்களுடைய பட்டாவையும் பார்த்து கொள்ளலாம். மேலும் இந்த ஒரு ஆப் மூலம் உங்களுடைய நிலம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் உங்களுடைய மொபைல் போனிலேயே பார்த்து கொள்ளவும் முடியும், பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும்.
இந்த செயலி தமிழ்நாடு அரசின் நில நிர்வாகச் சேவைகளை குடிமக்கள் எளிதாக அணுகுவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.