#BREAKING : திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக..! தனித்து போட்டியிட முடிவு ?

VELMURUGAN STALIN
VELMURUGAN STALIN
Updated on

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கிட குறித்து இன்னும் பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் சூழலில் சில கட்சிகளின் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படும் காரணத்தால் கூட்டணியில் இருந்து விலகி வரும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து எம்எல்ஏ வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தற்போது வெளியேறியுள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வேல்முருகன். கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க திமுக மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள தவாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன் வேல்முருகன் அளித்த பேட்டியில் திமுகவிடம் வைத்த 10 கோரிக்கைகள் குறித்தும் அது பற்றிய செய்திகளை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியிருந்த நிலையில் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க திமுக மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக வாழ்வுரிமை கட்சி (Tamilaga Vazhvurimai Katchi – TVK)யை 2012ல் நிறுவியவர் பாட்டாளி கட்சியின் முன்னாள் உறுப்பினரான Pattali Makkal Katchi (PMK) வேல்முருகன் ( T. Velmurugan.).தமிழர் உரிமைகள் பாதுகாப்பை கட்சியின் நோக்கமாகக் கொண்டு சமூக நீதியூடன் தமிழ்நாட்டின் வளங்கள் மற்றும் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை மற்றும் மாநில உரிமைகள் (State rights) குறித்து வலியுறுத்தி வந்தது தவாக.

இவர் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு MLA வாகப் பணியாற்றி வருகிறார்.குறிப்பாக 2021 தேர்தலில் இக்கட்சிக்கு ஒரு இடம் (பண்ருட்டி) மட்டுமே ஒதுக்கப்பட்டு அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.நீட் தேர்வு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, தமிழர் வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றில் தீவிரமாகப் போராடி மக்கள் ஆதரவைப் பெற்றவர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தவாக-வின் 10 முக்கியக் கோரிக்கைகள்:

  1. தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.

  2. சாதி வாரிக் கணக்கெடுப்பு (Caste Census) நடத்த வேண்டும்.

  3. வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

  4. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கச் சிறப்புப் போலீஸ் பிரிவு அமைக்க வேண்டும்.

  5. நீட் (NEET) தேர்வு ரத்து.

  6. தமிழ் மொழி பாதுகாப்பு மற்றும் தாய்மொழி வழிக் கல்வி.

  7. மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு.

  8. தமிழ் கலாச்சாரத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடு.

  9. மாநில உரிமைகள் பாதுகாப்பு (State Autonomy).

  10. மத்திய அரசின் கல்வி மற்றும் மொழிக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு.

2026 தேர்தலில் தவாக : 2 முதல் 10 தொகுதிகள் வரை கேட்டதாகவும் திமுக 1 அல்லது 2 seats மட்டுமே தரும் என்றும் தகவல்கள் வந்தது. DMK கூட்டணியில் கட்சிகள் அதிகமாக இருப்பதால் சீட் ஒதுக்க முடியாத நிலையில் சிறிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற கருத்துகளும் களத்தில் பரவுகிறது.

இந்நிலையில் இந்த கோரிக்கைகளை முன் வைத்தும் கூடுதல் சீட்டு கேட்டும் திமுகவிலிருந்து தவாக விலகியுள்ளது. ஓரு குறிப்பிட்ட பிரிவினரின் வாக்கு வங்கியை தனக்கு சாதகமாக வைத்திருக்கும் தவாக கட்சியின் தனித்துப் போட்டியிடும் முடிவு வாக்குகளை பிரிக்குமா என்பது குறித்து தற்போது அரசியல் களத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
Part 1 Vs. Part 2: பார்ட் 2 படங்களில் ஜெயித்தது எது? சொதப்பியது எது?
VELMURUGAN STALIN
logo
Kalki Online
kalkionline.com