Part 1 Vs. Part 2: பார்ட் 2 படங்களில் ஜெயித்தது எது? சொதப்பியது எது?

Chapter 2 movies in indian cinema
Chapter 2 movies

ந்திய அளவில் மெகா ஹிட் ஆன பாகம் 2 படங்களின் பட்டியலையும், முதல் பாகம் அளவு இரண்டாம் பாகம் சோபிக்கவில்லை என்ற விமர்சனத்துக்கு ஆளான படங்களின் பட்டியலையும் பார்த்து விடுவோம்.

1. 1. பாகுபலி பாகம் 2

Bhahubali 2
Bhahubali 2Credits: sonyLIV

ராஜ்மவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி (2015) 180 கோடி பட்ஜெட்டில் தயார் ஆகி 650 கோடி வசூலை வாரிக்குவித்தது. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆன கட்டப்பா ஏன் இப்படி செய்தான்? என்ற கேள்வி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பாகுபலி பாகம் 2 முடிவுரை (2017) 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 1610 கோடி வசூலை அள்ளியது.

2. 2. புஷ்பா பாகம் 2

Pushpa 2
Pushpa 2

அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வந்த புஷ்பா (2021) 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி 390 கோடி வசூலை அள்ளியது. இதில் 'ஊ சொல்றியா மாமா ஓ சொல்றியா' பாட்டு பட்டாசைக் கிளப்பியது.

புஷ்பா பாகம் 2 (2024) சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி 1800 கோடி வசூலை அள்ளியது.

3. 3. K.G.F

KGF Chapter 2
KGF Chapter 2Credits: IWM Buzz

லோ பட்ஜெட் படங்களை எடுக்கும் கன்னடத்திரை உலகம் திடீர் என பாதை மாறி சுமார் 180 கோடி பட்ஜெட்டில் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே ஜி எப் பாகம் 1 (2018), பாகம் 2 (2022) ஆகிய இரு படங்களையும் உருவாக்கி மொத்தம் 1800 கோடி வசூலை அள்ளியது.

4. 4. காந்தாரா பாகம் 2

Kantara 2
Kantara 2Credits: Kalakkal cinema

அடுத்ததாக ரிஷப் ஷெட்டி நாயகன் ஆக நடித்து இயக்கிய காந்தாரா பாகம் 1 (2025) சுமார் 125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 900 கோடி வசூலை அள்ளியது.

காந்தாரா பாகம் 2 சுமார் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 450 கோடி வசூலை அள்ளியது. ஆக தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் தலா இரண்டு பிளாக் பஸ்டர் படங்கள் இரு பாகங்களாக வந்து அமோக வெற்றி பெற்றவை.

5. 5. விக்ரம் பாகம் 2

Vikram 2
Vikram 2Credits: FilmiBeat

தமிழில் கமல் நடித்த விக்ரம்(1986) இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் 1.5 கோடி பட்ஜெட்டில் உருவாகி 8 கோடி வசூலைப் பெற்றாலும் எதிர்பார்த்த பிரம்மாண்ட வெற்றி பெறவில்லை. கோவை அப்சராவில் மட்டும் 100 நாட்களைக் கடந்து ஓடியது.

விக்ரம் பாகம் 2 (2022) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 120 கோடி பட்ஜெட்டில் உருவாகி 500 கோடி வசூலித்தது. கமலின் வாழ்க்கையிலேயே அதிக வசூல் இதுதான்.

6. 6. ஜெயிலர் பாகம் 2

Jailer
JailerCredits: Studio flicks

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் பாகம் 1 (2023) 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி 650 கோடி வசூலித்து கமலின் சாதனையை முறியடித்தது.

ஜெயிலர் பாகம் 2 இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை.

7. 7. ஜப்பானில் கல்யாண ராமன்

Japanil kalyana raman
Japanil kalyana ramanCredits: Youtube

கமல் நடிப்பில் ஜி.என் ரங்கநாதன் இயக்கத்தில் வந்த கல்யாண ராமன் (1979) இரட்டை வட நடிப்பில் வெளிப்புறப் படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்று வசூலில் சக்கை போடு போட்டது. இதன் பட்ஜெட், வசூல் விபரங்கள் கிடைக்கவில்லை.

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஜப்பானில் கல்யாண ராமன் (1985) அட்டர் பிளாப் ஆனது.

8. 8. மணல் கயிறு பாகம் 2

Manal kayiru 2
Manal kayiru 2Credits: prime video

எஸ்.வி.சேகர் நடிப்பில் விசு இயக்கத்தில் உருவான மணல் கயிறு (1982) அதிரி புதிரி ஹிட். இதில் நாயகன் போடும் மணப்பெண்ணுக்கான கண்டிஷன்கள் கலக்கலாக இருக்கும்.

எஸ் வி சேகர் மகன் அஸ்வின் சேகர் நாயகன் ஆக நடித்து எஸ் வி சேகர் கதை ,திரைக்கதை எழுத ,மதன் குமார் இயக்கத்தில் வந்த மணல் கயிறு பாகம் 2 (2016) படு தோல்வி அடைந்தது

9. 9. குரோதம் பாகம் 2

Krotham 2
Krotham 2Credits: Youtube

பிரேம் மேனன் நடிப்பில் ஏ ஜெகன்னாதன் இயக்கத்தில் வந்த குரோதம் (1982) மெகா ஹிட்.இதன் ஒரிஜினல் கதை டெத் விஷ் (Death Wish-1974)என்ற ஹாலிவுட் படத்தின் கதை.மணிவண்ணன் தமிழுக்கு ஏற்றபடி திரைக்கதை எழுதினார். பிரேம் மேனன் நடிப்பில் அவரே இயக்கி குரோதம் பாகம் 2 (2000) வெளியானது.இதுவும் செம ஹிட். பட்ஜெட், வசூல் விபரங்கள் இல்லை.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: துரந்தர் தி ரிவெஞ்ச் - நான்கு மணி நேர ஆக்க்ஷன் அமர்க்களம்!
Chapter 2 movies in indian cinema

10. 10. இந்தியன் பாகம் 2 (2024)

Indian 2
Indian 2Credits: JFW

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன்(1996) மெகா ஹிட்.15 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 5 மடங்கு லாபத்துக்கு மேல் தந்தது. இந்தியன் பாகம் 2 (2024) அதே ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளிவந்தது. மாபெரும் தோல்வி. முதல் பாகத்தில் திரைக்கதை, வசனம் சுஜாதா. 2ம் பாகத்தில் ஜெயமோகன். 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 151 கோடி மட்டுமே வசூலித்துத் தோல்வி அடைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com