தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்!

Tata motors deal with TN Govt
Tata motors deal with TN Govt

தமிழகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகனம் உற்பத்தி செய்வதற்காக 9 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது.

வாகங்கள் உற்பத்தி செய்வதற்காகக் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், 5 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனத் தகவல் வந்துள்ளது. 5 ஆண்டு காலம் உற்பத்தி காலத்தைத் திட்டமிட்டுள்ளதால், அந்த 5 ஆயிரம் நபர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வேலை வாய்ப்புக் கிடைக்கும் எனத் தெரியவருகிறது. மேலும் இதற்கானத் தொழிற்சாலையை ராணிபேட்டையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து, கடந்த மாதம் வின்பாஸ்ட் தொழிற்சாலை கட்டுமானத்திற்குத் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டினார் முதல்வர். இதன்தொடர்ச்சியாகத்தான் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று முகாம் அலுவலகத்தில் தொழில முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 9000 கோடி முதலீடும், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புத் தரும் வகையிலும், வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் தமிழ்நாட்டிற்கும் டாடா மோட்டார்ஸுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது."

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பி.பி.பாலாஜி ஆகியோரிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
நள்ளிரவு வரைப் பேச்சுவார்த்தை நடத்திய அண்ணாமலை, டிடிவி தினகரன்!
Tata motors deal with TN Govt

மேலும் இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் செயலாளர் வி. அருண் ராய் ஆகியோர் கலந்துக்கொண்டனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் கி.செந்தில்ராஜ் மற்றும் டாடா குழுமத்தின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com