ஆசிரியர்கள் ‘செல்போன்’ பயன்படுத்த தடை! பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு..!

School teachers
School teachers
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தமிழகத்தில் மார்ச் 11 துவங்கி ஏப்ரல் 6 வரை நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகளும், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு பணிகளை கண்காணிப்பதற்கு அதாவது தேர்வு மையங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளியின் தேர்வு மைய கண்காணிப்பாளராக அதே பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் செயல்பட அனுமதி இல்லை.

பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாகப் பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையக் கண்காணிப்பாளராக (Chief Superintendent) அந்தந்தப் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களே செயல்பட அனுமதி இல்லை என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.

2026-ஆம் ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்ல அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், நிலையான பறக்கும் படையினர், அறைக் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து வகை தேர்வு மையப் பணியாளர்களும், ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தனது செல்போன்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்துவிட்டு, இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் உறுதிமொழி சான்றினை பூர்த்தி செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் வினாத்தாள்களை முறையாக விநியோகம் செய்து, முழு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

இதற்காகப் பின்வரும் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன:

  • ஒவ்வொரு அறையிலும் அறைக் கண்காணிப்பாளர்கள் வினாத்தாள்களை தேர்வர்களுக்கு வழங்கிய பின் மீதமுள்ள வினாத்தாள்களை அதே உறையினுள்ளிட்டு Cellotape கொண்டு Seal செய்து முதன்மைக் கண்காணிப்பாளர் துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். வினாத்தான் மீதம் எதுமில்லாத உறைகளையும் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இவ்வாறு பெறப்பட்ட அனைத்து உறைகளையும் கட்டாகக் கட்டி மீதமுள்ள வினாத்தாள்களுடன் வழித்தட அலுவலரிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.

  • விடைத்தாள் சேகரிப்பு மையங்களின் தொடர்பு அலுவலர்கள் இவ்வாறு பெறப்படும் வினாத்தாள் உறைகளிலிருந்து வினாத்தாள்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெற்று உறைகளை தனிக் கட்டுகளாகக் கட்டி அனைத்து தேர்வுகள் முடிவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுப் பணிகளில் முறைகேடுகளைத் தடுக்கவும், வினாத்தாள் கசிவைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தடுத்ததன் மூலம், அவர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்படவும், மாணவர்கள் கவனச்சிதறல் அடையாமல் தேர்வு எழுதவும் இது வழிவகுக்கும்

இதையும் படியுங்கள்:
விவாகரத்து வழக்கில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..! வாட்ஸ் அப் உரையாடலை நம்பகமான வாக்குமூலமாக கருத முடியாது..!
School teachers
logo
Kalki Online
kalkionline.com