ஆதார் மோசடிகளைத் தவிர்க்க புதிய பாதுகாப்பு அம்சம்!

ஆதார் மோசடிகளைத் தவிர்க்க புதிய பாதுகாப்பு அம்சம்!

ஆதார் அட்டை தற்போது இந்தியாவின் தனித்துவ அடையாள அட்டை மாறிவிட்டது எனலாம். ஒருவர் இந்தியகா குடிமகன் என்பதை அறிய ஆதார் அட்டை அவசியமாகிறது. சிம்கார்டு வாங்குவது முதல் வெளிநாடு செல்வது வரை ஆதார் பயன்படுத்தப்படுகிறது. எங்கு சென்றாலும் முதலில் ஆதாரைத் தான் கேட்கிறார்கள் என்ற நிலையில், அதைப் பயன்படுத்தி பல்வேறு விதமான நூதன மோசடிகளும் நடந்து வருகிறது. 

கன்னியாகுமரியில் கூட செல்போன் வாங்குவதற்காகக் கொடுத்த ஆதார் ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு நபர் 80 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. ஆன்லைன் கடன் கொடுக்கும் செயலிகளில் பிறருடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்தி கடனை பெறுவது. மேலும் பிறருடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் மாதத் தவணையில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிய நிகழ்வும் இதில் அடங்கும். 

எனவே, ஆதார் அட்டையைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகளைத் தவிர்க்க விதமாக, புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. உங்கள் தனிப்பட்ட தகவல்களின் ஒட்டுமொத்த அங்கமாக விளங்கும் ஆதார் கார்டில், சரியான மொபைல் எண்ணை சேர்ப்பது அவசியம் என ஏற்கனவே மத்திய அரசு கூறியிருந்தது. 

அந்த வகையில் Two Layered Security Mechanism என்ற அம்சத்தை சமீபத்தில் UIDAI உருவாக்கியுள்ளது. மக்களின் ஆதார் விவரங்களை பாதுகாக்கவும், இதனால் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என UIDAI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த Two Layered Security Mechanism முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும். ஆதார் அட்டை சரிபார்ப்பு செயல்களின் போது,  கைரேகையை அங்கீகரிக்கவும் மற்றும் மோசடி தொடர்பான விஷயங்களை கண்டறியவும் இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஸ்கேன் செய்யப்பட்ட கைரேகையின் உயிரோட்டத்தை சரிபார்க்க 'ஃபிங்கர் மினுசியா மற்றும் பிங்கர் இமேஜ்' இரண்டில் கலவையை இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தும். இந்த அம்சத்தால் கைரேகையின் உண்மையைத் தன்மையை 100% சரி பார்க்க முடியும். இந்த தொழில்நுட்பத்தின் உதவியால் இனி ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, எவ்விதமான மோசடி செயல்களிலும் ஈடுபட முடியாது என்று கூறப்படுகிறது.

இவ்விதமான நியூ லேயர் வெரிஃபிகேஷன் தொழில்நுட்பம், ஆதார் அட்டையைப் பயன்படுத்தி நடக்கும் பரிவர்த்தனைகளை மேலும் வலுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும் எனப்படுகிறது. 

இனிவரும் காலங்களில் நிதி பரிவர்த்தனை, வங்கிகள், அரசு மற்றும் தொலைத் தொடர்பு துறைகளில் இது அதிக அளவில் பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com