புதிய ஸ்மார்ட் வாட்ச்: 1500 மட்டுமே.

புதிய ஸ்மார்ட் வாட்ச்: 1500 மட்டுமே.

ற்போது வேகமாக இயங்கி வரும் உலகில் பயணத்தின் போதும், உடற்பயிற்சியின் போதும் மக்களோடு அதிகமாக இணைந்திருப்பது ஸ்மார்ட் வாட்ச் தான். இதன் பயன்பாடு சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. சந்தையில் எத்தனையோ வகையான ஸ்மார்ட் வாட்ச் பிராண்டுகள் இருக்கின்றன. சமீபத்தில் 1500 ரூபாயில் ப்ளூடூத் காலிங் வசதியுள்ள ஸ்மார்ட் வாட்சை  NoiseFit நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

புதிதாக வந்துள்ள இந்த ஸ்மார்ட் வாட்சில் மிகவும் அழகான வட்ட வடிவிலான டயல் மற்றும் மேம்படுத்தப் பட்ட காலிங் வசதியோடு இன்னும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கிளவுட் முறையில் செயல்படும் அம்சங்கள் உள்ளடங்கி இருக்கிறது. 

இந்தப் புதிய ஸ்மார்ட்வாட்ச்-ன் அறிமுகம் குறித்து இணை நிறுவனர் அமித் காத்திரி கூறுகையில்,

 "க்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒவ்வொரு தயாரிப்பு இருக்க வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம். உடற்பயிற்சி மற்றும் புதிய முயற்சிகளை தன் வாழ்வில் மேற்கொள்ள விரும்பும் நபர்களின் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு ஸ்மார்ட் வாட்ச் வெளியீட்டின் போதும் அது பயனர்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறையில் அர்த்த முள்ள மேம்பாடுகளை சேர்க்கும் அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் எங்கள் கவனம் அதிகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச், குறைந்த விலையில், நல்ல டிஸ்ப்ளே வசதியுடன், மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில் பயனர்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது."

1.38 இன்ச் TFT டிஸ்பிளே உடன் வரும் இந்த ஸ்மார்ட் வாட்ச், 500 nits பிரைட்னெஸ் மற்றும் 240×240 பிக்சல் அம்சத்தைக் கொண்டது. விலையை குறைப்பதற்கு இதில் Non-Amoled டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 

ப்ளூடூத் அழைப்பை ஏற்கும் வசதியுடன், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோனும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

இந்த வாட்சில் உள்ள டயல் பேட் மூலமாக யாரேனும் நம்மை தொடர்பு கொண்டால் அணுகலாம் அல்லது  நேரடியாக அழைக்கலாம். அதன் நினைவகத்தில் மொத்தம் பத்து தொடர்கள் வரை சேமிக்க முடியும். 

ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 7 நாட்கள் வரை இதன் பேட்டரி நீடிக்கும். மேலும் இதில் IP68 ரேட்டிங் கொண்ட தூசி மற்றும் தண்ணீர் ரெசிஸ்டன்ஸ் வசதி உள்ளது. 

நமது உடல்நலம் மற்றும் பிட்னஸ் ட்ராக்கிங் செய்ய பல ஹெல்த் சூட் வசதிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி இதயத் துடிப்பு, தூக்கத்தை கணக்கிடுவது, மூச்சு விடுதல், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, மேலும் பல விஷயங்களைக் கணக்கிட முடியும். 

நம்பகமான மற்றும் மலிவு விலையில் ஒரு ஸ்மார்ட் வாட்ச் தேடுபவர்களுக்கும் தொடக்க நிலையில் ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்படும் எவருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஒரு அட்டகாசமான தேர்வுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com