கோர்ட் அதிரடி தீர்ப்பு..! இனி வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அந்த வீட்டிற்கு உரிமை கொண்டாடலாம்..! ஆனால்...

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on

இந்தியாவில் முன்பு வாடகைக்கு இருப்பவர்கள் பல ஆண்டுகள் அந்த வீட்டில் இருந்து வீட்டின் உரிமையாளரிடம் சொந்தம் போல் பழகி, கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்று சொந்தக்காரர்கள் போல் பழகுவார்கள். ஆனால் தற்போது வாடகைக்கு இருப்பவர்கள் கால் பட்டால் குத்தம், கை பட்டால் குத்தம் என்பது போல் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் வீட்டு உரிமையாளரிடம் சண்டை போடுபவர்களும் இருக்கிறார்கள், சண்டை போட்டு கொண்டு பல வீடுகள் மாறுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் வாடகைக்கு இருந்து கொண்டு வீட்டின் உரிமையாளரையே மிரட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும் தான் வீட்டின் உரிமையாளரும், வாடகைக்கு குடியிருப்பவர்களும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். வீட்டின் உரிமையாளர் வீட்டை வாடகைக்கு விடும் போது அதிக பல்வேறு கண்டிஷன்களை போடுவதும், வாடகைக்கு குடிவருபவர் அந்த கண்டிஷன்களை முறையாக பின்பற்றாத போது தான் இருவருக்கும் இடையே பிரச்சனை ஆரம்பமாகிறது.

அந்த வகையில் ஒரு சிலர் அதிக வருடங்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தால் அந்த வீட்டை சொந்தம் கொண்டாடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் சில வீட்டு உரிமையாளர்களுக்கு அதிக நாட்கள் ஒருவர் வாடகைக்கு குடியிருந்தால் அவர்களை வெளியேற்ற முடியாது, பிரச்சனை செய்வார்கள் என்ற அச்சமும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
5 ஆண்டுகளுக்கு மேல் வாடகைக்கு இருப்போருக்கு அந்த வீடு சொந்தமாகுமா..? உச்சநீதிமன்றம் சொல்வதென்ன..?
உச்சநீதிமன்றம்

அந்த வகையில் சமீபகாலமாக இந்தியாவில் அதிக வருடங்கள் வாடகைக்கு குடியிருப்போர் குடியிருக்கும் வீட்டை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வீட்டு உரிமையாளரை மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் உச்சநீதிமன்றம் தரமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

‘எதிர்மறை உரிமை நிலை' (Adverse Possession) விதிகள் வரம்புச் சட்டத்தில் (The Limitation Act) உள்ளன. இந்த சட்டத்தின்படி, வீட்டின் உரிமையாளரின் குறுக்கீடு இல்லாமல் சுமார் 12 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து ஒரு வீடு அல்லது கடையில் (சொத்தில்) வசித்தால், வாடகைதாரர் அதன்மீது சட்டப்படி உரிமை கோர முடியும். ஆனால் அதேசமயம் அதற்கு வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே சட்ட உரிமை கோர முடியும்.

2014-ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது. அதாவது, இதற்கு முன்பு வாடகைத்தாரர் குடியிருக்கும் வீட்டை சொந்தம் கொண்டாட முடியாது என்றும், உரிமையாளர் கோரும்போது காலி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில் தற்போது முந்தைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

வாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டை சொந்தம் கொண்டாட சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால், வரம்புச் சட்டம், 1963இன் படி, 12 வருடங்களாக வாடகை கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும்பட்சத்தில் இது சாத்தியமாகும்.

அதாவது, வாடகைதாரர் 12 ஆண்டுகள் தொடர்ந்து சொத்தை தன்வசம் வைத்திருந்து, உரிமையாளர் ஆட்சேபிக்காமல் இருந்தால், வாடகைத்தாரர் சொத்துரிமையை கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல் வாடகைத்தாரர் வீட்டு உரிமையாளரின் எந்த குறுக்கீடும் இல்லாமல் 12 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, வாடகைத்தாரரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால், வழக்குத் தொடர சட்டப்பூர்வ உரிமை உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், உரிமையாளர் தன் சொத்தின் உரிமையை இழக்காமல் இருக்க, இந்த 12 ஆண்டுகளுக்குள் சட்டப்பூர்வ ஆட்சேபணையோ புகாரோ பதிவு செய்ய வேண்டும். மேலும், உயில் (Will) அல்லது பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney - PoA) ஆவணங்களை மட்டும் கொண்டு சொத்துரிமையை நிலைநாட்ட முடியாது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
அதிர்ச்சி தகவல்..! உரிமை கோரப்படாத ரூ. 1.84 லட்சம் கோடி–வங்கிகளில் இந்தியர்களின் 'மௌனச் சொத்து'..!
உச்சநீதிமன்றம்

ஒரு வீடு அல்லது சொத்தை வாடகைக்கு விடுவதற்கு முன்பு, வாடகை ஒப்பந்தம் (Rent Agreement) செய்து கொள்வது சொத்தின் உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் நல்லது. ஒரு சரியான வாடகை ஒப்பந்தம், சட்டப்பூர்வ இடைவெளியை ஏற்படுத்தி, வாடகைதாரர் சொத்துரிமை கோருவதைத் தடுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com