கே.என்.நேரு வீட்டில் சோதனை.. குவியும் ஆதரவாளர்களால் திணறும் போலீஸ்..!!

சென்னை மயிலாப்பூர் முதல் திருச்சி வரை 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் படை முற்றுகை.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
KN Nehru
Updated on

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். குடிநீர் வழங்கல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கே.என்.நேரு இல்லத்தில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை குழு அதிரடி ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருச்சி தில்லை நகரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்:
எகிறிய தங்கத்துக்கு 'திடீர் பிரேக்': சவரனுக்கு ₹1,360 வீழ்ச்சி.!
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

திருச்சியில் உள்ள கே.என்.நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வரும் சூழலில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். மேலும் அவருடன் திமுக நிர்வாகிகள் பலரும் வருகை தந்துள்ளனர். சோதனை நடைபெற்று வரும் சூழலில் கே.என்.நேரு வீட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. திடீர் ரெய்டைத் தொடர்ந்து அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கே.என்.நேரு, அன்பில் மகேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் கே.என்.நேரு வீடு, அவருடைய சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அடையாறு, திருவான்மியூர், ஆர்.ஏ.புரம் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 8-ம் தேதியுடன் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்கான சட்டசபை விவாதம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியிருப்பது திமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கே.என்.நேரு வீட்டில் திமுக ஆதரவாளர்கள் அதிகளவில் குவிந்துள்ளதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். ஆளுங்கட்சியின் அடாவடி நடவடிக்கை இது என திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த திடீர் ரெய்டின் முடிவில் தான் சோதனையில் என்னென்ன ஆதாரங்கள் கிடைத்தன, பணம் பறிமுதல் உள்ளிட்ட தகவல்கள் வெளிவரும்.

இது பழி வாங்கும் நடவடிக்கை அல்ல எனவும், புகார் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் எனவும் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

KN Nehru
Dmk
இதையும் படியுங்கள்:
இனி நகைக்கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டாம்.!! ஆதித்யா பிர்லாவின் அதிரடி என்ட்ரி!
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து லஞ்சத்தை ஒழிக்க முழு முயற்சியை எடுப்போம் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் லஞ்சம் அதிகரித்தூள்ளது என தவெக குற்றம் சாட்டி வரும் நிலையில், ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் எ.வ.வேலு ஆகியோரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தனர்.

இதற்கிடையில் தற்போது கே.என்.நேரு வீட்டில் இன்று சோதனை நடந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் டெண்டர் விவகாரத்தில் ஊழல் செய்ததாக புகார் வந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் அரசு, முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனை நடத்துவது வழக்கமாகி விட்டது.

logo
Kalki Online
kalkionline.com