சிவகாசி பட்டாசு ஆலையத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பலி!

விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்
Published on

சிவகாசி அருகே வெம்பவக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பட்டாசு ஆலையில்  நிகழ்ந்த வெடி விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு தலா 3 லட்சம் நிவாரணமும் வழங்கியுள்ளார்.

வெம்பவக்கோட்டையை அடுத்த ராமுதேவன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து விழுந்தன. மேலும் அந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல் 10க்கும் மேற்பட்டவர்களைப் படுகாயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் அறிந்து அந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலிஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இன்று காலை 30க்கும் மேற்பட்டோர் ஆலையில் வேலை செய்து வந்தனர். அப்போது ஒரு அறையில் மணி மருந்து எனப்படும் ரசாயன மூலப்பொருளைக் கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்று  தெரிய வந்தது.

சிவகாசி, சாத்தூர் மற்றும் வெம்பவக்கோட்டை பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இன்னும் இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளார்களா என்று தேடி வருகின்றனர். மேலும் சில தீயைணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் பலருக்கு 90 சதவீத அளவு காயம் ஏற்பட்டிருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் புதுவைக்கு வர வேண்டும்.. முதல்வர் ரங்கசாமி வேண்டுகோள்!
விபத்து நடந்த இடம்

சம்பவ இடத்திற்கு வருவாய் துறை அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அந்த இடத்திற்கு ஆய்வு செய்ய வந்தார். அப்போது இது ஒரு மனிதத் தவறுதான் இந்த விபத்திற்கு காரணம் என்றும், அதிகப்படியான வெடி மருந்து பொருட்கள் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com