அமெரிக்காவில் 1000 பேர் கூடிய இடத்தில் நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூடு!

kansas
kansas

அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் நகரில் சூப்பர் பவுல் லீகின் வெற்றி பேரணியின்போது திடீரென்று ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதில் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் படுகாயமும் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் எப்படி பிரபலமான ஒன்றோ அதேபோல் அமெரிக்காவில் ரக்பி லீக் போட்டிகள் மிகவும் பிரபலமானது. இரண்டு லீக் நடைபெற்று, அந்த இரண்டு லீக்கில் வெற்றி பெற்ற இரு அணிகள் மீண்டும் மோதிக்கொள்ளும். இதனை அமெரிக்காவில் 'சூப்பர் பவுல் போட்டி' என்று அழைப்பார்கள். இதுதான் அமெரிக்காவின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுகிறது. இந்த போட்டியைக் காண பல கோடி மக்கள் காத்துக் கிடப்பார்கள். அந்த வகையில் இந்த சூப்பர் பவுல் போட்டி திங்கட்கிழமை இரவு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இப்போட்டியில் கலிஃபோர்னியா அணியை, கன்சாஸ் சிட்டி அணி வீழ்த்தியது.

இதனைக் கொண்டாடும் வகையில், கன்சாஸ் அணி மக்கள் வெற்றிப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட இந்த பேரணியில் மேயர் மற்றும் அவரது குடும்பத்தினர்களும் கலந்துக்கொண்டனர். அப்போது அந்த பேரணியில் கலந்துக்கொண்ட சில மர்ம நபர்கள் திடீரென்று சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்கள். இதனால் மக்கள் பதட்டத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் அங்கும் இங்கும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினார்கள். இந்த சம்பவத்தில் ஒரு நபர் கொல்லப்பட்ட நிலையில், பல குழந்தைகள் உட்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதேபோல் 11 குழந்தைகளை கன்சாஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களில் ஒன்பது குழந்தைகளுக்கு குண்டடிப் பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த உடனே விரைவாக 800 போலிஸார்கள் குவிக்கப்பட்டனர். போலீஸார் ஒரு மூன்று பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து வைத்துள்ளனர். இருப்பினும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை. ஆகையால் விசாரணை நடந்துக்கொண்டுத்தான் இருக்கின்றது. மேலும் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்காது என்றும், ஒரு சாதாரணப் பேச்சுவார்த்தை விபரீதத்தில் முடிந்தது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஜே.இ.இ. தேர்தவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் முகுந்த் பிரதீஷ்!
kansas

இந்தியாவை போல் அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்கென அவ்வளவு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆகையாலே அங்கு அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. துப்பாக்கி வாங்குவதற்கு பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்று பலர்  கூறினாலும், துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனங்கள் அந்த கட்டுப்பாடுகள் வராமல் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com