ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பயங்கர செயல்… 24 பேர் பலி!

Terrorist attack
Terrorist attack
Published on

ஜம்மு காஷ்மீரில் இன்று பிற்பகல் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் பிற்பகல் 3 மணியளவில் பைசரன் பள்ளத்தாக்கு அருகே 'மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் இடத்தில் நடந்தது.

தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். கொடூர செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள், தப்ப விடமாட்டோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதி அசைக்க முடியாதது, இன்னும் வலுவடையும்” எனக் கூறினார்.

பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் எந்த பயங்கரவாத அமைப்பு உள்ளது என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

சமீப காலமாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய அரசு மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து இப்பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த துயர சம்பவம், பயங்கரவாதத்தின் கோர முகத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்.

இதையும் படியுங்கள்:
இயற்கை பேரழிவு வருவதை முன்கூட்டியே உணர்த்தும் 'ஓர்ஃபிஷ்கள்'
Terrorist attack

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com