இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தற்போது இஸ்ரேல் லெபனான் எல்லைப் பகுதியில் தாய்லாந்து மக்கள் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் காசா போர் தொடங்கி ஓர் ஆண்டாக்கு மேல் ஆகியுள்ளது . ஆனால், இன்னும் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பல உலக நாடுகளும் இஸ்ரேலிடம் போரை நிறுத்தும்படி கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை போரை நிறுத்தமாட்டோம் என்று கூறிவிட்டது. மேலும் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருந்து வருகிறது. ஆகையால், ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
அதேபோல், இஸ்ரேலும் ஈரான் மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.
அதேபோல் இந்த போர் லெபனான் வரை விரிவடைந்துள்ளது. இதுவரை லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறினர். அதேபோல், அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். ஆகையால், அங்குள்ள பிற நாட்டினருக்கு அந்தந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளன. இந்தியாக்கூட உதவி எண்களை அறிவித்தது. தென்கொரியா தங்கள் நாட்டினரை விமானம் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டது.
இப்படியான சூழலில் நேற்று முன்தினம் லெபனான் இஸ்ரேலை தாக்கி 7 பேரைக் கொன்றது. இதனால், பதில்தாக்குதல் நடத்திய இஸ்ரேல் லெபனானின் 25 பேரை கொன்றுள்ளது. அந்தவகையில் தற்போது லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் உள்ள மெட்டுலா என்ற இடத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் தாய்லாந்து நாட்டினவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் இறந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மரிஸ் சங்கியாம்பொங்சா தெரிவித்துள்ளார்.
இது முதல்முறை அல்ல. இது பலமுறை நடந்திருக்கிறது. சென்ற ஆண்டு இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியபோது 1200 பேர் கொல்லப்பட்டனர். இதில் 41 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30 தாய்லாந்து நாட்டவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். இதில் 6 பேர் இன்னும் கைதிகளாக இருப்பதாக தாய்லாந்து அதிகாரிகளால் நம்பப்படுகிறது.
இஸ்ரேல் காசா போருக்கு முன்னர் சுமார் 30 ஆயிரம் தாய்லாந்து நாட்டவர்கள் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போர் குறித்து தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் பேசுகையில், “மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து நாடுகளும் அமைதி பாதைக்குத் திரும்ப வேண்டும்.” என்று பேசினார்.