

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நிறைவுற்று யார் ஆட்சியில் அமரப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கப்போகும் முடிவுகள் அறிவிக்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வதும், ஓய்வு எடுப்பதும் பற்றிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த தேர்தலை சுவாரசியமாக்கியதில் புதிய கட்சியான தமிழக வெற்றிக்கழகத்துக்கு பெரும் பங்கு உண்டு. திரை உலகில் முன்னணி நடிகரான விஜய் துவங்கிய தமிழக வெற்றி கழகம் இளைஞர்களை ஓட்டு போட வைத்தது என்றும் இளைஞர்களுக்கு அரசியல் பற்றிய அறிவை தந்து விஜயைத் தலைமையாக்க தீவிரமாக இயங்கி வருவதாகவும் பல்வேறு விவாதங்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் என்றும் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றதற்கு தவெக கட்சியின் இளைஞர் படையும் ஒரு காரணம் என்று ஒரு புறம் பெயர் கருத்துக்கள் வந்து கொண்டு இருக்க அடுத்த ஆட்சி அமைக்கப் போவது எங்கள் தலைவர் தான் என விஜய்யின் தீவிர ரசிகர்கள் ஆங்காங்கு பதிவுகளை போட்டுக் கொண்டிருக்க விஜய் ஆன்மீக தலங்களை தாக்கி படை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவ்வகையில் சமீபத்தில் திருச்செந்தூருக்கு விஜய் பயணம் செய்து முருகனை வழிபட்ட செய்தி பரபரப்பானது. விஜய் கட்சியை துவங்கி பரப்புரையில் ஈடுபட்ட முதல் கூட்டமான கரூரில் அவரை காண வந்த ரசிகர்கள் கூட்டம் முந்தி அடித்து நிறுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் 41 பேர் பலியான சம்பவம் பலியான மறக்க முடியாத சம்பவத்தை தொடர்ந்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதும் ஏதேனும் அசும்பா விதங்கள் நடப்பதும் வாடிக்கையாக்கி வருகிறது இதன் காரணமாகவே விஜய் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தும் பல ஊர்களில் தனது பிரச்சாரத்தை ரத்து செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய வந்த விஜய் வருகிறார் எனத் தெரிந்து ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். விஜய் சென்றது அதிகாலை நேரம் என்பதால், தகவல் அறிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். விஜய் வருவதைக் கண்ட ரசிகர்கள், வழக்கம் போல அவரைக் காண்பதற்காக உற்சாகத்தில் தடுப்புகளைத் தாண்டி முன்னேற முயன்றதாக கூறப்படுகிறது.
அங்கு காவல்துறை இருந்த போதும் பெரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது காவல்துறையினருக்குப் பெரும் சவாலாகவே இருந்தது. ஏதேனும் அசம்பாவிதம் நிகழக் கூடாது என்பதில் சக காவலர்கள் கவனமாக இருந்த நிலையில் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கனகராஜ், ரசிகர்களை நோக்கி மைக் மூலம் மிகவும் நிதானமாகவும், பொறுப்பாகவும் பேசி அவர்கள் கவனத்தைக் கவர்ந்தார்.
"உங்கள் தலைவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எங்களுக்குப் புரிகிறது. ஆனால், நீங்களே இப்படி முண்டியடித்துக் கொண்டு நின்றால் எப்படி? அவர் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டிய கடமை ரசிகர்களாகிய உங்களுக்கும் உண்டு. விஜய் வந்துட்டு போகிற வரைக்கும் நீங்களும் ஒரு போலீஸ்தான்! அவருக்கு பாதுகாப்பு அரணாக நீங்களே இருந்து ஒத்துழைப்பு தர வேண்டும்." என்று அவர் பேசியதும் சுற்றி இருந்த ரசிகர்கள் அவரது பேச்சை வரவேற்று கைதட்டல் தந்தனர்.
ஆய்வாளரின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்ததோடு காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். விஜய் வந்த போது அவர் மேல் விழாமல் அமைதியாக அவருக்கு வழி விட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இது போன்ற கூட்டங்களில் சற்று கடுமையைக் காட்டி அப்புறப்படுத்தும் காவலர்களிடையே ரசிகர்களுக்கு மரியாதை அளித்து பொறுமையாக அவர்களுடைய பொறுப்பை உணர்த்திய காவல் ஆய்வாளரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு, அவரது ரசிகர்களே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இவர் போன்ற காவலர்கள் உண்மையில் பாராட்டுக்குரிய வர்கள்.