
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று, செப்டம்பர் 2025 திங்களுக்கு 13.09.2025 முதல் 16.09.2025 முடிய பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளின் அறிவிப்புப் பலகையிலிருந்து விநியோகத் தேதியினை அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தினை மேற்குறிப்பிட்ட பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
* 13.09.2025, 14.09.2025 மற்றும் 15.09.2025 (மூன்று நாட்கள்) மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர்
* 13.09.2025, 14.09.2025, 15.09.2025 மற்றும் 16.09.2025 (நான்கு நாட்கள்) திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர். அண்ணா நகர் மற்றும் ஆலந்தூர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.