
இந்தியர்களை பைத்தியக்காரர்கள் என்று பேசிய பெண்ணுக்கு இனவெறியை தூண்டுவதாக சொல்லி விமானத்தில் பயணிக்கத் தடை விதித்துள்ளனர்.
பொதுவாக அரசியல் வாதிகளும் இரு நாடுகளின் அரசாங்கங்களும் என்னத்தான் சண்டைப் போட்டுக்கொண்டாலும், மக்கள் ஒற்றுமையாகத்தான் இருப்பார்கள். ஒரு நாட்டு மக்கள் மற்றொரு நாட்டுக்கு வருவார்கள் செல்வார்கள். ஒரு நாட்டு மக்கள் மற்றொரு நாட்டு மக்களை விரும்பாதவர்கள் வெகு சிலரே.
அந்தவகையில் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சாலையில் இயக்கப்படும் பேருந்து ஒன்றில் புகைப்பட கலைஞர் பர்வேஸ் தௌபிக் என்பவரும் மற்றும் சிலரும் ஏறியிருக்கின்றனர். அப்போது அவர்களுக்குள் எதோ தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பர்வேஸ் தௌபிக்கை அமெரிக்க பெண் கடுமையாக பேசியிருக்கிறார்.
முதலில் அந்த அமெரிக்க பெண் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணின் மகனிடம் பேச்சு கொடுத்திருக்கிறார். அப்போதுதான் இவர்கள் இந்தியா வம்சாவளி என்று அந்த பெண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. அப்போதிலிருந்து அந்த சிறுவனிடம் கடுமையாக பேசி வந்திருக்கிறார். மேலும் வாய மூடு என்று அந்த சிறுவனை திரும்ப திரும்ப பேசியிருக்கிறார்.
இதனால் அந்த சிறுவனின் பெற்றோர் மிகவும் கோபப்பட்டுள்ளனர். என் மகனை அப்படி சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறியிருக்கின்றனர். இதைக் கேட்டு அந்த அமெரிக்க பெண்ணின் கணவர் என் மனைவியிடம் அப்படி பேசாதீர்கள் என்று சொல்ல சண்டை முற்றிவிட்டது.
இதுகுறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்த பெண் கூறியிருக்கிறார். அதாவது “அந்த பெண் மிகவும் கடுமையாக பேசியதும் தங்கள் குழந்தையை வாயை மூடு என்று சொல்லியதும் மிகவும் கோபப்படுத்தியது. அதனால் அப்படி சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினேன். அந்த பெண் உன் குடும்பம் இந்தியாவைச் சேர்ந்தது. உங்களுக்கெல்லாம் எந்த விதிமுறையும் இல்லை. நீங்கள் பைத்தியம் பிடித்தவர்கள் என்றெல்லாம் கூறினார்.” என்று பேசினார்.
இதனால் இனவெறியை வெளிப்படுத்தியதாக சொல்லி அந்தப் பெண்ணுக்கு united Airlines விமானத்தில் ஏற தடைவிதிக்கப்பட்டது.