கேப்டன் முட்டாள்தனமாக பேசுகிறார் – ஹர்பஜன் காட்டம்!

Harbajan
Harbajan
Published on

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து இந்திய அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் வீரர் ஒருவர் இது திட்டமிட்ட வெற்றி என்று காரணங்களை அடுக்கினார். இதற்கு இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுக்கும் விதமாக பேசியிருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிபோட்டி இன்று  நடைபெறவுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பும் இன்றைய போட்டியில்தான் உள்ளது. இரு அணிகளில் எந்த அணி வெற்றிபெற்றாலும், அது வரலாற்று சாதனையாகத்தான் கருதப்படும்.  இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து வெற்றிபெற்றுதான் இறுதிபோட்டிக்கு முன்னேறியது. பலம் வயந்த இங்கிலாந்து அணியை இதற்குமுன்னர் ஒருமுறை அரையிறுதியில் இந்திய அணி சந்தித்தது. ஆனால், அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது.

இந்தமுறை இந்திய அணி வெற்றிபெற்றது பலருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வட்டாரத்தினர் தொடர்ந்து பல எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டம் கயானாவில் நடைபெற்றதால் தான் இந்தியா வெற்றி பெற்றதாகவும், இந்தியாவுக்கு மட்டும் ஏற்கனவே எந்த ஆடுகளத்தில் விளையாட போகிறோம் என்று தெரிந்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருக்கிறார். இந்தப் போட்டி டிரிண்டாட் மைதானத்தில் நடைபெற்றிருந்தால் இங்கிலாந்து வென்றிருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். ஏதோ ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளத்தை தேர்வு செய்தது என்பது போல் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்குதான் தற்போது முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பதில் கருத்து தெரிவித்துள்ளார்,

இதையும் படியுங்கள்:
இறுதிபோட்டியில் களமிறங்கும் இரு அணிகள் கடந்து வந்த பாதை!
Harbajan

"கயானா தான் இந்தியாவுக்கு ஏற்ற நல்ல ஆடுகளம் என்று எதை வைத்து நீங்கள் முடிவு எடுத்தீர்கள். இரண்டு அணிகளுக்கும் ஒரே ஆடுகளம் தானே வழங்கப்பட்டது. அதிலும் இங்கிலாந்து அணி அரையிறுதியில் டாஸ் வென்றது மிகப்பெரிய சாதகமான விஷயமாக மாறியது. புத்தி கெட்ட முறையில் இருப்பதை நிறுத்துங்கள். இங்கிலாந்தை மூன்று பிரிவுகளிலும் இந்தியா சிறப்பாக வீழ்த்தியது. இதுதான் உண்மை. இதை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துச் செல்லுங்கள். உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். லாஜிக் உடன் பேசுங்கள்! அதை விட்டுவிட்டு முட்டாள்தனமாக எந்த கருத்தையும் தெரிவிக்காதீர்கள்.” என்று காட்டமாக பேசியுள்ளார்.



 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com