இறுதிபோட்டியில் களமிறங்கும் இரு அணிகள் கடந்து வந்த பாதை!

SA and India: ஐயா! தோல்வினா என்னங்கய்யா?
SA Vs IND
SA Vs IND

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணியும் இந்திய அணியும் தகுதிபெற்றுள்ளது. அந்தவகையில் இந்த இரண்டு அணிகளும் இந்த தொடரில் ஒரு தோல்விக்கூட சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளதுதான் பலரையும் ஆச்சர்யக்கடலில் தள்ளியுள்ளது.

எந்த அணி இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் என்பதை கணிக்க, நாம் அந்த அணிகள் இதற்கு முன் விளையாடிய போட்டிகளை அலசுவோம். ஆனால், அப்படி இரு அணிகளும் ஒரு தோல்விக்கூட அடையாமல், அனைத்து போட்டிகளிலும்  நல்ல பவுலிங், பேட்டிங் செய்தால், கணிப்பதில் எவ்வளவு சிரமம் இருக்கும்? தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் கடந்து வந்த பாதை பற்றி இப்போது பார்ப்போம். வெற்றியைக் கணிக்க எதாவது க்ளூ கிடைக்கிறதா என்றும் பார்ப்போம்.

இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்து தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை 96 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வெறும் 119 ரன்களை அடித்து பாகிஸ்தானை தோற்கடித்தது.

மூன்றாவது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. அடுத்து கெனடாவை எதிர்க்கும் போட்டி மழையால் ரத்தானது. அதன்பின்னர் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 181 ரன்கள் குவித்து 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 196 ரன்கள் குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 25 ரன்கள் குவித்த இந்திய அணி, 24 ரன்கள் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தியது. அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்டு இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி உள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி குரூப் டி பிரிவில் இடம்பெற்று முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்க்கொண்டது. 77 ரன்களில் அந்த அணியை சுருட்டி தென்னாப்பிரிக்கா அணி வென்றது. இதையடுத்து நெதர்லாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 104 ரன்கள் என்ற இலக்கைத் தட்டு தடுமாறி வென்றது. பின் வங்கதேசத்துக்கு எதிராக 114 ரன்கள் என்ற இலக்கை தக்க வைக்கப் போராடிய தென் ஆப்பிரிக்கா அணி, நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இதையும் படியுங்கள்:
T20 World Cup: இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி சந்திக்கப் போகும் அணி..!
SA Vs IND

நேபாளை எதிர்த்து போட்டியிட்ட தென் ஆப்பிரிக்கா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. அமெரிக்காவுக்கு எதிராக 194 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா அணி அந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிராக ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போராடி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

எனினும் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்கள் எல்லாம் சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இதை வைத்து பார்க்கையில், இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் சுலபமாக வென்றது. ஆனால், தென்னாப்பிரிக்கா அணி சில போட்டிகளில் சற்று தடுமாறவே செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது என்றாலும், பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com