சோதனையின்போது விழுந்து நொறுங்கிய சீன ராக்கெட்!

China's rocket
China's rocket
Published on

சீனாவில் உருவாக்கப்பட்ட  தியான்லாங் 3 என்ற ராக்கெட் சோதனையின் போது எதிர்பாராத விதமாக விண்ணில் பாய்ந்து, பின் கீழே விழுந்து நொறுங்கியது.

உலக நாடுகள் பல விண்வெளியில் சாதனைப் படைக்க வேண்டும் என்று போட்டிப்போட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றன. அந்தவகையில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவ்வப்போது ராக்கெட்டுகளை நிலா மற்றும் பிற கோள்களுக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்து வருகின்றன.

அந்த வகையில் சீனாவும் விண்வெளியில் மறு பயன்பாட்டு ராக்கெட் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சீனாவின் விண்வெளி முன்னோடி ஆய்வு நிறுவனமான தியான்பினங் டெக்னாலஜிஸ் அண்ட் கோ, தியான்லாங் 3 என்ற ராக்கெட்டினை உருவாக்கியது. அதாவது ஒருமுறை மட்டுமே அனுப்பி ஆராய்ச்சி செய்யும் ராக்கெட்டால் பல கோடி ரூபாய் செலவாகிறது. ஆகையால், அதே ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தும் முறைப்பற்றியே சீனா ஆராய்ச்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் தான் நேற்று சீனாவின் கோங்கி பகுதியில் டையாங்லாங் 3 ராக்கெட்டின் முதல் கட்ட சோதனை நடைபெற்றது. திட்டமிட்டபடி கவுண்ட் டவுன் முடிந்ததும் வெண் புகையை வெளியேற்றியப்படி விண்ணில் சீறிப்பாய்ந்த டையாங்லாங் 3 ராக்கெட் சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்தது. அதன் இன்ஜினில் தீப்பற்றிய நிலையில் ராக்கெட்டின் பூஸ்டர் மீண்டும் தரையை நோக்கி வந்தது. இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் மலைப்பகுதியில் ராக்கெட்டின் சில பாகங்கள் விழுந்து வெடித்து சிதறியது. இதனால், உயிர்சேதங்கள் எதுவும் நிகழவில்லை.

கடந்த வாரம் சீனா-ப்ரான்ஸ் இணைந்து ஏவிய ராக்கெட் விபத்துக்குள்ளானது.

இதையும் படியுங்கள்:
பாடல் கேட்டதால் தூக்கு தண்டனை… வடகொரியாவில் கொடூரம்!
China's rocket

அதேபோல் சில தினங்களுக்கு முன்புதான் சீனா ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியது. அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிலவின் மற்றொரு இருண்டப் பக்கத்தில் ராக்கெட் அனுப்பியது. அந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கருவி நிலாவின் மண்ணை அள்ளி வந்தது. இது உலகிலேயே சீனாதான் முதன்முதலாக முயற்சி செய்து வெற்றியும் கண்டது. ஆகையால், அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி பயணிக்கும் சீனாவிற்கு இந்த ராக்கெட் விபத்து பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com