மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அறிவித்த நாடு… வெடித்தது சர்ச்சை!

Protest in Peru
Protest in Peru
Published on

பல நாடுகளில் மாற்றுப்பாலினத்தவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற போராட்டங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது பெரு நாட்டில், மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என அறிவித்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, சர்வதேச நோய்களின் பட்டியலிலிருந்து மாற்றுப்பாலின சிக்கல்களை நீக்கி 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன்பின்னர் ஒவ்வொரு நாட்டிலும் மாற்றுப்பாலினத்தவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடந்துதான் வருகின்றன. ஈராக் போன்ற நாடுகளில் அவர்களுக்கு சிறை தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

இன்னும் சொல்லப்போனால் ஈராக்கில் முதலில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பல நாடுகளின் கடுமையான எதிர்ப்பால், அந்த தண்டனை மாற்றப்பட்டு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. இந்தியா போன்ற சில நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு மட்டும் அங்கீகாரம் அளிக்க மறுத்தாலும், அதற்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பெரு நாட்டின் மாற்றுப் பாலினத்தவர்களை அங்கீகரிப்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நீண்ட காலமாக எழுந்து வருகின்றன. இப்படி இருக்கையில், சமீபத்தில் ஒரு அரசாணையில் அந்நாட்டு அதிபர் தினா பலுவரேட் கையொப்பமிட்டுள்ளார். அதில், மாற்றுப்பாலினத்தவர்கள் மனநோயாளிகள் என்றும், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உத்தரவு LGBTQ மக்களிடம் அதிருப்தியை உருவாக்கும் என்றும், ஆனால் அவர்கள் மாற்று சிகிச்சை எதற்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் பெரு அரசு கூறியுள்ளது. என்னதான் அரசு சமாதானம் கூறினாலும், அவற்றை பெரு நாட்டு மக்கள் ஏற்க மறுக்கின்றனர். இந்த முடிவை அரசு திரும்பப்பெற வேண்டுமென்றும், திரும்பப்பெறும் வரை ஓயமாட்டோம், தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம் என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு!
Protest in Peru

இந்தியாவில் மாற்றுப்பாலினத்தவர்களை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை திட்டமிட்டாலும், அதனை  நடைமுறை படுத்தவில்லை என்றே கூற வேண்டும். இந்தநிலையில் ஐரோப்பியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. அப்படியிருக்க, தென் அமெரிக்காவில் மூன்றாவது பெரிய நாடான பெருவில் இதுபோன்ற அறிவிப்பை அறிவித்தது உலகம் முழுவதும் உள்ள மாற்றுப்பாலினத்தவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com