அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மெக்சிகோ மற்றும் கொலம்பியா நாடுகளின் இறக்குமதிக்கான வரியை உயர்த்தியுள்ளார்.
அமெரிக்காவில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. கமலா ஹாரீஸுக்கும் ட்ரம்புக்கும் இடையே பெரிய போட்டி இருந்தது. இதில் டொனால்ட் டரம்ப் வெற்றிபெற்றார். இதனையடுத்து அவர் அதிபராக பொறுப்பேற்றார். பதவியேற்றவுடனே பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
இதில் ஒன்று, பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனால், அங்கு வாழும் 10 லட்ச இந்தியர்கள் பேரதிர்ச்சி ஆனார்கள்.
அதாவது பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அந்நாட்டு மண்ணில் பிறந்த குழந்தைக்குத் தாமாக குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான சட்டம் கடந்த 1868ம் ஆண்டிலிருந்து அமலில் இருந்து வருகிறது.
அதேபோல், மக்கள் சட்டவிரோதமாக குடியேறி வந்தார்கள். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அதன்படி சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக 538 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இப்படி சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்த மக்களில் மெக்சிகோ, கொலம்பியா நாடுகளின் மக்களும் அடங்கும். இதனால், அவர்களை விமானம் மூலம் அவர்கள் நாட்டுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், அங்குதான் ஒரு பிரச்னை வெடித்தது. அதாவது விமானங்களை அந்த நாடுகளில் தரையிறக்க அனுமதிக்கவில்லை. மீண்டும் அந்த விமானங்கள் அமெரிக்காவிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ட்ரம்ப் மிகவும் கோபமடைந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதிபர் ட்ரம்பின் இந்த அதிரடி உத்தரவு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.