மும்பையிலுள்ள KEM (King Edward Momorial) Hospital -இல், மார்பக புற்று நோய் கொண்டவர்கள் பலர் உள்ளனர். பெண்களின் ப்ரைவசி கருதி, அவர்களுக்காக, தனியாக ஒரு பகுதி (Ward ) அமைக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோள் 15 வருடங்களுக்குப் பின் தற்போது செயல் படுத்தப்பட்டிருப்பது நிறைவான விஷயமாகும். தவிர, தெர்மலடிக்ஸ் இயந்திரமும் KEMல் வைக்கப்பட்டுள்ளது.
தெர்மலடிக்ஸ் :-
தெர்மலடிக்ஸ் இயந்திரம் மும்பையிலுள்ள KEM மருத்துவமனையில், மார்பக புற்று நோயைக் கண்டறிய புதியதாக வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். மார்பக புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறியக்கூடிய தெர்மலடிக்ஸ் இயந்திரம், AI -ஐ அடிப்படையாகக் கொண்டது. தெர்மலடிக்ஸ் மூலம், 30 வயதிற்கு மேற்பட்ட சுமார் 7,000 பெண்களுக்கு Mammography செய்ய இயலுமெனக் கூறப்படுகிறது.
தெர்மலடிக்ஸ் இயந்திரத்தின் முக்கிய அம்சங்கள் :-
கதிர் வீச்சை பயன்படுத்தாததால், பாதுகாப்பான முறையாகும்.
தெர்மலடிக்ஸ் ஒரு சிறிய போர்ட்டபிள் இயந்திரம். பரவலாகப் பயன்படுத்தலாம்.
நோயாளியின் உடலில் இருந்து, ஆடையை அகற்ற தேவையில்லை. தெர்மலடிக்ஸை உபயோகிக்கையில் தொடுதல் கிடையாது. தனி மனித உரிமையை பாதுகாக்கும் விதத்தில் தெர்மலடிக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.
மார்பக புற்று நோயை மிகத் துல்லியமாக கண்டறியக் கூடியது தெர்மலடிக்ஸ் இயந்திரம். மேலும், மார்பக அடர்த்தியுள்ள பெண்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தெர்மலடிக்ஸ் இயந்திரத்தை, மகாராஷ்ட்ரா மற்றும் பிற மாநிலங்களுக்கும் எளிதாக எடுத்துச் சென்று மார்பக புற்றுநோய் ஸ்கீரினிங் முகாம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
உபரி தகவல்கள் :-
பெங்களூரில் இருக்கும் "Nirmai Health Analytix", தெர்மலடிக்ஸ் இயந்திரத்திற்கு பின்னால் செயல்படும் நிறுவனமாகும்.
தெர்மலடிக்ஸ்ஸின் விலை ரூபாய் 50 லட்சம்.
KEM - இல் Innovation study செய்வதின் பொருட்டு, தெர்மலடிக்ஸ் இயந்திரத்தை MCGM இலவசமாக வழங்கியுள்ளது.
தெர்மலடிக்ஸ் இயந்திரத்தின் முன்பாக நோயாளி அமர்ந்தால் போதும். மார்பகங்களை அழுத்த வேண்டாம். குறைந்த பட்சம், 15 நிமிடங்களுக்குள், டெஸ்ட் செய்து ரிப்போர்ட் கிடைத்துவிடும்.
ப்ரைவேட் மருத்துவமனைகளில், Mammography, Surgery, Chemeo theraphy போன்றவற்றிற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும். KEM மருத்துவமனையில் அனைத்தும் இலவசம். தவிர, மகாத்மா ஜ்யோத்ராவ் புலே ஜன ஆரோக்ய யோஜனாவும் (MPJAY) இதற்கு உதவுகிறது.
மார்பக புற்றுநோய்க்கென உருவாக்கப்பட்டிருக்கும் புதிய மருத்துவ டெக்னாலஜி (தெர்மலடிக்ஸ்) மற்றும் ஸ்பெஷல் வார்டு அமைப்பு ஆகியவை பாராட்டப்பட வேண்டியவை.