தமிழகத்தில் இன்று மாலையுடன் முடிகிறது தேர்தல் பிரச்சாரம்!

Compaign
Compaign

வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, இன்றுடன் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதற்கான அவகாசமும் முடிவடைகிறது.

இந்தியா முழுவதும் லோக்சபா தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக, பாஜக, அதிமுக போன்ற ஏராளமான கட்சிகளும் சுயேச்சைகளும் போட்டியிடவுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அனல் பறக்கும்  பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு கட்சிகளும் போட்டிப்போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழக தலைவர்கள் மட்டுமல்ல தேசிய தலைவர்களும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க மோதி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழகத்தில் ஓட்டு சேகரிக்க ஈடுபட்டனர்.

அந்தவகையில், தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என்பது தேர்தல் விதியாகும். அதனால், இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தேர்தல் வேட்பாளர்களும் கட்சிகளும் இறங்கியுள்ளனர்.

இன்று 6 மணி வரையே அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி உண்டு. அதன்பிறகு சமூக வலைத்தளங்களில் கூட வாக்கு சேகரிக்க கூடாது. இன்று 6 மணிக்கு பிறகு வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

ஒருவேளை இன்று 6 மணிக்கு மேல் வேட்பாளர்கள் அல்லது கட்சி தலைவர்கள் ஓட்டு சேகரித்தால், அதை 1950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த எண்ணிற்கு முன்னர் மாவட்டத்தின் STD தொலைபேசி எண்ணையும் சேர்க்க வேண்டும். இன்றுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணிகளும் முடிவடைகிறது. தமிழகத்தில்  92.08 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
துபாய்: 2 வருடங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… கூடும் பலி எண்ணிக்கை!
Compaign

பிரச்சாரம் ஓய்ந்ததும் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும். மேலும், ஓட்டல்கள், விடுதிகளில் வெளியூர் நபர்கள் இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.  அதேபோல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஓட்டு சேகரிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com