ஆதரவற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நட்சத்திர விடுதியில் விருந்தளித்த பிரபல நடிகர்!

ஆதரவற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நட்சத்திர விடுதியில் விருந்தளித்த பிரபல நடிகர்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆதரவற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் விருந்தளித்தார் பிரபல நடிகரும், இசையமைப்பாளரும் மற்றும் இயக்குனருமான விஜய் ஆண்டனி.

எப்போதுமே நடிப்பில் பல்வேறு வித்தியாசத்தை விரும்பும் நடிகர் விஜய் ஆண்டனி அவரே இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப் படம் கடந்த 19 - ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த வாரங்களுக்கு முன் 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் வெளியாகி நல்ல வசூலை விஜய் ஆண்டனிக்கு பெற்று தந்துள்ளது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி பாத்திமா இருவரும் இணைந்து பல்வேறு நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா, சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிச்சைக்காரர்களை அழைத்து படம் பார்க்க வைத்ததுடன், அவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சில தினங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி, திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஆண்டி பிகிலி கிட்டை வழங்கி, அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

இந்நிலையில் தற்போது ஆதரவற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அசைவ உணவுகள் தன் கைகளினாலே பரிமாறி விஜய் ஆண்டனி விருந்தளித்துள்ளார். அவரின் இந்த செயல் பலரது பாராட்டுக்களை குவித்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com