தவெக கட்சியின் அடுத்த பிக் அப்டேட்!

Vijay
Vijay
Published on

நடிகர் விஜயுடைய தவெக கட்சியின் அடுத்த மிகப்பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கட்சியின் மாநாடு குறித்தான செய்தி வெளியாகியுள்ளது.

அரசியலுக்கு வரப் போவதாக நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சியைத் தொடங்கினார். வரும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். அதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் தனது 69வது படத்துடன் தனது சினிமா பயணத்தை முடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களை நேரில் சந்தித்து பரிசுகளை வழங்கினார் விஜய். இன்னும் சில காலங்களில் கட்சியின் சின்னம் அறிவிப்பதாக செய்திகள் கசிந்தன.

இந்தநிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியை கட்சியினர் தொடங்கிவுள்ளனர். இந்த மாநாடு திருச்சி, மதுரை அல்லது சேலம் ஆகிய 3 நகரங்களில் எங்கு நடத்தலாம்? என அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல், இதற்காக விஜய் தமிழகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அதற்கான திட்டம் தயாராகிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், கட்சியின் மாநாட்டை சேலத்தில் நடத்தலாமா? என்பது குறித்து முடிவெடுக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று முன்தினம் சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாழிக்கல்பட்டி பகுதியில் உள்ள திடலை பார்வையிட்டார். தொடர்ந்து ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் உள்ள இடங்களையும் புஸ்ஸி ஆனந்த் நேரில் பார்வையிட்டார்.

இதையும் படியுங்கள்:
ஜப்பானில் ஒரே நிமிடத்தில் மறைந்துப் போகும் மக்கள்!
Vijay

ஒருவேளை சேலத்தில் மாநாடு நடத்தினால், சுமார் 10 லட்சம் பேரை அழைக்க வேண்டும் என்று கட்சி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மதுரை, திருச்சியை விட சேலத்தில் மாநாடு நடத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும், கட்சி தலைவர் விஜய்தான் அதனை முடிவு செய்து அறிவிப்பார்.

ஒருவேளை சேலத்தில் மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டால், சின்ராச கையிலேயே பிடிக்கமுடியாது என்பதுபோல, சேலத்தில் உள்ள விஜய் ரசிகர் மன்றம் மற்றும் மக்களை கையிலேயே பிடிக்க முடியாதப்பா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com