தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் போட்ட உத்தரவுகள்… இனி தேர்தல் வரை இப்படித்தான்!

Transport
Transport

லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய உத்தரவுகளை நேற்று பிறப்பித்துள்ளது. இதனையடுத்து கண்டக்டர்களுக்கும் ட்ரைவர்களுக்கும் உடனே உத்தரவுகள் பறந்தன.

ஏப்ரல் 19ம் தேதி அன்று தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஆகையால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடுகள் குறித்த முடிவுகளை அறிவித்தவண்ணம் உள்ளனர். சென்ற வாரம் சனிக்கிழமை அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றிலிருந்து நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன.

அந்த விதிமுறைகளில் எந்த இடத்திலும் பேனர், போஸ்டர் போன்றக் கட்சி விளம்பரங்கள் செய்யக்கூடாது என்பதும் உள்ளது. ஆகையால் ஏற்கனவே ஒட்டிவைத்த கட்சி விளம்பர போஸ்டர் மற்றும் பேனர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசியல் தலைவர்களின் உருவச்சிலைகளைத் துணிகள் பயன்படுத்தி மூடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் நேற்று தேர்தல் ஆணையத்திலிருந்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை விடுக்கப்பட்டது. அதாவது  நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும்கூட பல இடங்களில் அதனைப் பின்பற்றவில்லை என்பதுக் குறித்து அறிக்கை விடப்பட்டது.

அதில் பொது இடங்களில், அதாவது ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம், தொலைபேசி கம்பங்கள், தனியார் இடங்களில் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடம் போன்ற இடங்களில் இருக்கும் பேனர், போஸ்டர், சுவர் எழுத்துகள் போன்ற அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அரசு பஸ்களில் தனியார் அமைப்புகள் குத்தகைக்கு எடுத்து பார்சல் அனுப்பும் முறை இருந்து வருகிறது. அதேபோல் நகரங்கள் இடையே ஆள் இல்லாமல் பார்சல் அனுப்பும் வழக்கமும் உள்ளது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பணம் பரிமாற்றம் தடுப்பதைக் கருத்தில்கொண்டு இதனைப் பற்றித் தேவையான நடவடிக்கை எடுக்கக்கூறி தமிழகப் போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
லோக்சபா தேர்தல் : திமுகவின் வாக்குறுதிகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள்!
Transport

இதனையடுத்துதான், அரசு பஸ்களில் ஆட்கள் இல்லாமல் பார்சல் அனுப்பக்கூடாது என்று அரசு ட்ரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை மூலம் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனினும், எந்த வாகனத்திலும் பயணிகள் 50 ஆயிரம் வரை பணம் எடுத்துக்கொண்டு தாராளமாகச் செல்லலாம். ஒருவேளை சோதனை செய்ய வந்தால், பணம் எடுத்துச் செல்வதற்கானக் காரணத்தை சொல்லிவிட்டு பயணிக்கலாம்.

ஆனால் 50 ஆயிரத்திற்குமேல் பணம் எடுத்துக்கொண்டு பயணித்தால் அதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். அதேபோல் 10 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com