39 நாணயங்கள், 37 காந்தங்கள் சாப்பிட்டால் பாடி பில்டர் ஆகலாம்.. டாக்டர்கள் அதிர்ச்சி!

Body building
Body building
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

இப்போது body builder ஆக வேண்டுமென்பது பலரின் கனவாக உள்ளது. அந்தவகையில் விரைவில் body builder ஆக வேண்டும் என்ற ஆசையில் நாணயங்களில் இருக்கும் தூத்தநாகத்தால் சீக்கிரம் உடல் ஏரிவிடும் என்று நம்பி அவர் நாணயங்களையும் காந்தங்களையும் சாப்பிட்டிருக்கிறார்.

டெல்லியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் கடந்த 20 நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் சிரமப்பட்டிருக்கிறார். இதனையடுத்து குடும்பத்தார்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வயிற்று வலி குணமாகவே இல்லை. ஆகையால் அவரை டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவருக்குப் புற்றுநோயாக இருக்குமோ என்று எண்ணி மருத்துவர்கள் புற்றுநோய் பிரிவில் சேர்த்தனர். அவரால் எதையுமே சாப்பிட முடியவில்லை. அதன்பிறகு பெற்றோர்கள் அவர் நாணயங்கள் சாப்பிட்டதாக டாக்டர்களிடம் கூறியுள்ளனர்.  இதனையடுத்து டாக்டர்கள் X-Ray எடுத்துப் பார்த்துள்ளனர். அதில் காந்தங்களும் நாணயங்களும் குடற்பகுதியை அடைத்திருந்தது தெரியவந்தது. உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவரது சிறுக்குடலிலிருந்து 2 ரூபாய், 1 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களும், காந்தங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. மொத்தம் 39 நாணயங்களும் 37 காந்தங்களும் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டன. 7 நாட்களுக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
ரயில் கட்டணம் குறைப்பு.. தினசரி பயணிகள் மகிழ்ச்சி!
Body building

இதுபற்றி மருத்துவர்கள் அவரிடம் கேட்டபோது நாணயங்களில் இருக்கும் தூத்தநாகம் பாடி பில்டிங்கிற்கு உதவும் என்று நம்பி விழுங்கிவிட்டதாக கூறினார். மேலும் அந்த நாணயங்கள் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக காந்தம் எடுத்துக்கொண்டதாகவும் கூறினார்.

டாக்டர்கள் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பிவைத்தனர். இதுபோன்று நாணயங்கள், காந்தங்கள் சாப்பிடுவதெல்லாம் அச்சுறுத்தலை உண்டாக்கும் எனவும் கூறியுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com