கூகுளை நம்பி சுவுதி பாலைவனத்தில் சிக்கி பலியான தென்னிந்தியர் !

Saudi desert
Saudi desert
Published on

தெலுங்கானாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சவுதி அரேபியா பாலைவனத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு திடீரென்று ஜிபிஎஸ் வேலை செய்யாததால், அங்கேயே மாட்டிக்கொண்டு தவித்திருக்கிறார். இந்தநிலையில் நான்கு நாட்களாக தண்ணீர், உணவின்றி பலியாகியுள்ளார்.

எப்படி ஆடுஜீவிதம் படத்தில் வெகுநாட்களாக பாலைவனத்தில் சிக்கி தண்ணீர் உணவின்றி, பாதி உயிருடன் அங்கிருந்து தப்பித்தாரோ? அதேபோல்தான், இங்கும் நடந்திருக்கிறது. ஆனால், உயிர்பிழைக்கவில்லை. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சவுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சமீபத்தில்கூட வெயில் காரணமாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு உயிரிழந்தனர்.

அந்தவகையில் ஹைத்ராபாத்தைச் சேர்ந்த முகமது ஷெஹ்சாத் கான் சவுதி அரேபியாவில் உள்ள பிரபல டெலிகாம் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய வயது 27. இவர் தனது சூடான் நண்பருடன் ரப் ஆஃப் காலி பாலைவனத்திற்குச் சென்றுள்ளார். இவர்கள் சென்றுக்கொண்டிருக்கும்போது ஜிபிஎஸ் சிக்னல் கட்டாகி உள்ளது.

அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும் நேரத்தில், மொபைலிலும் சார்ஜ் இல்லாமல் அது ஸ்விட்ச் ஆஃப் ஆனது. இதனால், யாரையும் அழைக்க முடியாமல் அவர்கள் கதிகலங்கி நின்றனர். எப்படியாவது பாலைவனத்தைத் தாண்டிவிடலாம் என்று நினைத்த அவர்கள் தொடர்ந்து வண்டியை ஓட்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வண்டியில் எரிபொருளும் தீர்ந்துள்ளது. இதனால், அவர்களால் எங்கேயும் போக முடியாமலும், யாரையும் அழைக்க முடியாமலும் தடுமாறினர்.

நடந்தே அங்கும் இங்கும் அழைந்து திருந்திருக்கின்றனர். உணவும், தண்ணீரும் இல்லாமல் அவர்கள் பாலைவனத்தில் சிக்கித் தவித்தனர். பாலைவனத்தில் வெயில் தாக்கம் வேறு அதிகளவு இருந்தது. இது சுமார் 650 கிலோமீட்டருக்கு பரந்து விரிந்து கிடக்கும் பிரம்மாண்ட பாலைவனமாகும். உலகின் ஆபத்துமிக்க பாலைவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
தாஜ்மஹாலை மூன்று முறை விற்ற இந்தியாவின் மோசமான மோசடிக்காரர்!
Saudi desert

கடுமையான நீரிழப்பு மற்றும் சோர்வு காரணமாக இருவரும் பாலைவனத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடன் பணியாற்றிய நண்பர்கள் இவர்களை காணாததால், போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்ட நான்காவது நாள் அவர்களது உடல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் வண்டிக்கு அருகேயே அவர்களுடைய உடல்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com