வேனை விடுவிக்க 10 ஆயிரம் ரூபாய் கேட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்! அச்சோ அச்சச்சோ... அப்புறம்?

Police and Driver
Police and Driver
Published on

திருவள்ளூர் மாவட்டம் காடநல்லுார், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த அருள் (28) என்பவர் ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பகுதியில் இருந்து வைக்கோல் கட்டுக்களை தனது மினி வேனில் ஏற்றிக்கொண்டு சில நாட்களுக்கு முன்னர் பேரணாம்பட்டு சென்றார். குடியாத்தம் அடுத்த நெல்லுார்பேட்டை அருகே சென்றபோது சாலையின் பக்க வாட்டில் இருந்த மின்கம்பி உரசி வைக்கோல் தீப்பற்றி எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார், தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.  

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்திருந்த தாலுகா ஸ்டேஷனைச் சேர்ந்த பெண் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி மற்றும் தலைமை பெண் போலீஸ் ஒருவர் ஆகியோர் டிரைவர் அருளிடம் சென்று, வேனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அருள், 'வியாபாரத்துக்காக எடுத்து வந்த வைக்கோல் கட்டுகளே தீயில் எரிந்து நாசமாயின. இதுவே எனக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பணம் கேட்டால் நான் என்ன செய்வது' என்று தெரிவித்தாராம். அதற்கு பெண் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரோ, 'அதெல்லாம் தெரியாது. கொடுத்தால் தான் வேனை விடுவோம். இல்லையென்றால் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றுவிடுவோம்' என்று திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து டிரைவர் அருள் 5 ஆயிரம் ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளார். அதெல்லாம் முடியாது என்று சிறப்பு எஸ்ஐ கூற, நஷ்டத்திலும் நஷ்டம், இது ஒரு நஷ்டம் என்று டிரைவர் தன்னிடமிருந்த 8 ஆயிரம் ரூபாயையும் அந்த பெண் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிக் கொண்டு அவர்கள் அந்த இடத்தை காலி செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தற்கொலை செய்துக்கொண்ட ரோபோ… பாவம் அதுக்கு என்ன கஷ்டமோ!
Police and Driver

இது குறித்த தகவல்கள் மீடியாக்களில் பரவ வேலூர் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி உத்தரவின் பேரில், எஸ் பி முன்னிலையில், குடியாத்தம் டிஎஸ்பி விசாரணை நடத்தினார்.

Special Sub Inspector Srimathi
Special Sub Inspector Srimathi

இதற்கிடையே நேற்று முன்தினம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து எஸ் பி உத்தரவிட்டார். இந்த உத்தரவு வேலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை முடிவில் வேறு துறை ரீதியான நடவடிக்கைகளும் பாயும் என நேர்மையான போலீசார் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com